உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ., சாதனை நோட்டீஸ் வீடுகளில் வினியோகம் 

பா.ஜ., சாதனை நோட்டீஸ் வீடுகளில் வினியோகம் 

பெலகாவி: மத்தியில் 10 ஆண்டு கால பா.ஜ., அரசின் சாதனைகள் அடங்கிய நோட்டீஸை, வீடு, வீடாக சென்று வினியோகிக்கும் பணியை தொண்டர்கள் செய்து வருகின்றனர்.கர்நாடகாவில் இரண்டாம் கட்டமாக 14 தொகுதிகளுக்கு, வரும் 7 ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. வேட்பாளர்கள் தங்கள் பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.இந்நிலையில் தேர்தல் நடக்கும் 14 லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட 112 சட்டசபை தொகுதிகளில், மத்தியில் 10 ஆண்டு காலம் பா.ஜ., அரசு செய்த சாதனைகள் அடங்கிய நோட்டீஸ்களை, வீடு, வீடாக வினியோகிக்க பா.ஜ., முடிவு செய்தது.அதன்படி பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., ராஜிவின் குடச்சி தொகுதியில் இருந்து, நோட்டீஸ் வினியோகிக்கும் பணி நேற்று துவங்கியது. இதுதவிர கிராமங்களில் பெரிய அளவில் கூட்டம் நடத்தி, பா.ஜ., அரசின் சாதனைகளை பற்றி எடுத்து சொல்லவும், தலைவர்கள், தொண்டர்கள் தயாராகி வருகின்றனர். குறிப்பாக ஆயுஷ்மான் சுகாதார திட்டம் பற்றி, விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முடிவு செய்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை