மேலும் செய்திகள்
விஜயதசமி சிலம்பு சண்டை ஆந்திராவில் இருவர் பலி
1 hour(s) ago
ராஜனுகுண்டே: பா.ஜ., --- எம்.எல்.ஏ., விஸ்வநாத் பிறந்த நாளை ஒட்டி, அவரை வாழ்த்தி வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததில், பைக்கில் சென்ற முதியவர் விபத்தில் சிக்கி 'கோமா' நிலைக்கு சென்றுள்ளார்.மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த மே மாதம், விளம்பர பலகை சரிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்தனர்.இதனால் சுதாரித்து கொண்ட பெங்களூரு மாநகராட்சி, நகரில் உள்ள பேனர்கள், கட்- அட்டுகளை அகற்ற உத்தரவிட்டிருந்தது. ஆனாலும் பெரும்பாலான பேனர்கள் அகற்றப்படவில்லை.இந்நிலையில் பெங்களூரு எலஹங்கா பா.ஜ., -- எம்.எல்.ஏ., விஸ்வநாத் பிறந்த நாளை ஒட்டி, அவரை வாழ்த்தும் விதமாக ராஜனுகுண்டே பகுதியில் ஏராளமான பேனர்கள், கட் அவுட்டுகள் வைக்கப்பட்டு இருந்தன.நேற்று முன்தினம் மாலை அப்பகுதியில், பக்தவச்சலம், 70 என்பவர் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது பேனர் சரிந்து பைக் மீது விழுந்தது. இதனால் பைக்கில் இருந்து பக்தவச்சலம் தவறி விழுந்தார்.தலையில் பலத்த காயமடைந்த அவரை, அப்பகுதியினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனாலும் அவர் கோமாவுக்கு சென்று விட்டார். ராஜனுகுண்டே போலீசார் விசாரிக்கின்றனர்.
1 hour(s) ago