உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ.,வை நம்பக்கூடாது!

பா.ஜ.,வை நம்பக்கூடாது!

என்.ஐ.ஏ., வருமான வரித்துறை, பி.எஸ்.எப்., ஆகியவை பா.ஜ.,வுக்காக பணியாற்றுகின்றன. தேர்தல் கமிஷன் இதில் தலையிட வேண்டும். பாம்பிடம் கூட நம்பி பழகலாம்; பா.ஜ.,வை நம்பக் கூடாது. மம்தா பானர்ஜி, மேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்.,

நட்புறவை கெடுக்க முயற்சி!

முதல்வர் மம்தா விரும்பியபடி, காலியாக உள்ள பல்கலை துணை வேந்தர் பதவிகளுக்கு, கல்வி அமைச்சர் பிரத்யா பாசு பரிந்துரைத்த நான்கு பெயர்களை ஏற்றேன். இருப்பினும் முதல்வருடனான என் நட்புறவை அமைச்சர் கெடுக்க முயற்சிக்கிறார். அனந்த போஸ், கவர்னர், மேற்கு வங்கம்

சில மணிநேர வேட்பாளர்!

உத்தர பிரதேசத்தின் மீரட் லோக்சபா தொகுதிக்கு சமாஜ்வாதி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவரை, சில மணி நேரங்களில் அகிலேஷ் மாற்றினார். தற்போது அவரையும் மாற்ற உள்ளதாக பேச்சு அடிபடுகிறது. ஜெயந்த் சவுத்ரி, தலைவர், ராஷ்ட்ரீய லோக் தளம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை