உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் இன்று பா.ஜ., தமிழ் சங்கமம்

டில்லியில் இன்று பா.ஜ., தமிழ் சங்கமம்

புதுடில்லி:தலைநகர் டில்லியில், பா.ஜ., தமிழ் செல் சார்பில், தமிழ் சங்கமம் விழா டால்கொட்டாரா மைதானத்தில் இன்று மாலை 4:00 மணிக்கு நடக்கிறது.தமிழ் வாக்காளர்களிடம் 100 சதவீத ஓட்டுப் பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், டில்லியின் 7 லோக்சபா தொகுதி பா.ஜ., வேட்பாளர்களை டில்லியில் வசிக்கும் தமிழ் மக்களிடம் அறிமுகபடுத்தியும், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசுகிறார்.டில்லி மாநில பா.ஜ., தலைவர் வீரேந்திர சச்தேவா, வேட்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை டில்லி தமிழ் செல் தலைவர் முத்துசாமி செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ