உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ., வின் அரசியல் வேறு: என்கிறார் பிரியங்கா!

பா.ஜ., வின் அரசியல் வேறு: என்கிறார் பிரியங்கா!

மும்பை: 'பா.ஜ., வின் அரசியல் வேறு. மக்கள் கலாசாரத்தை பா.ஜ., புரிந்து கொள்ளவில்லை' என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கூறினார். மஹாராஷ்டிரா மாநிலம் நந்தூர்பாரில் நடந்த நிகழ்ச்சியில் பிரியங்கா பேசியதாவது: காங்கிரஸ் கட்சியின் அரசியல் பாரம்பரியத்தின் அடித்தளம் மகாத்மா காந்தியால் போடப்பட்டது. அவர் எப்போதும் உண்மையை பேசினார். ஜனநாயகத்தில் மக்களே உயர்ந்தவர்கள் என்று கூறினார். பா.ஜ., வின் அரசியல் வேறு. மக்கள் கலாசாரத்தை பா.ஜ., புரிந்து கொள்ளவில்லை.

பழங்குடியினர்

நாட்டில் பழங்குடியினர் மீது தாக்குதல் நடக்கும் போதெல்லாம், பிரதமர் மோடி முதல் பெரிய தலைவர்கள் வரை அனைவரும் அமைதியாக இருக்கிறார்கள். அவர்கள் பழங்குடியினர் நிலத்தை பெரிய தொழிலதிபர்களுக்கு கொடுக்கிறார்கள். நாட்டின் ஒரே பழங்குடியின முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் தேர்தல் நேரத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

நடைபயணம்

காங்கிரஸ் எம்.பி ராகுல் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 4,000 கிலோமீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொண்டார். மக்களின் பிரச்னைகளை கேட்டறிந்தார். மக்களின் பிரச்னைகளைப் புரிந்து கொள்ள நடைபயணம் செல்லும் எந்தத் தலைவர்களும் நம் நாட்டில் இருக்க மாட்டார்கள்.

பொய்

பிரதமர் மோடி என்ன சொன்னாலும் அது பொய். அவர் எது சொன்னாலும் அது தேர்தலுக்காக மட்டுமே. ஊழலுக்காகத் தனியாகப் போராடுவதாகக் கூறுகிறார். அவர் இந்திராவிடம் இருந்து உறுதியையும் துணிச்சலையும் கற்றுக்கொள்ள வேண்டும். அவரை (இந்திரா) நீங்கள் தேசவிரோதி என்று அழைப்பதால் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள முடியாது.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

பேசும் தமிழன்
மே 12, 2024 13:10

பப்பு உடன் சேர்ந்து கொண்டு.... இந்த அம்மாவும்.... பிரியங்கா காந்தி... ராபர்ட் காந்தி.... என்று போலி பெயரை வைத்து கொண்டு நாட்டு மக்களை ஏமாற்ற கிளம்பி இருக்கிறது.


கடல் நண்டு
மே 11, 2024 20:36

கிட்டத்தட்ட வருடங்களாக இந்தியாவை நாறடித்த காங்கிரஸ் பரம்பரையின் பதவிவிக்கான பிதற்றல்


Ramesh Sargam
மே 11, 2024 20:19

மக்கள் கலாச்சாரத்தை பற்றி பேச காங்கிரஸ் கட்சிக்கு அறுகதையே இல்லை காங்கிரஸ் கட்சிக்கு தெரிந்ததெல்லாம் ஊழல் ஊழல் ஊழலோ ஊழல்


Rajasekar Jayaraman
மே 11, 2024 20:08

இருட்டு கொள்ளை கூட்டம் காங்கிரஸ் வேறு;திருடனை பிடிக்கும் பாஜக வேறுதான்.


Pandi Muni
மே 11, 2024 18:21

தெரியுமே காங்கிரஸ் இந்தியர்களுக்கான கொள்கைகளை ஒரு போதும் கொண்டிருக்கவில்லை அது அந்நிய மதங்களுக்கானது அந்நிய நாடுகளுக்கானது


krishnamurthy
மே 11, 2024 17:53

இவர் சொல்வது முழுதும் பொய் தனது தோல்வியை ஏற்காமல் அவசர நிலை கொண்டு வந்த இந்திரா இடம் கற்றுக்கொள்ள ஏதுமில்லை


என்றும் இந்தியன்
மே 11, 2024 17:36

% சரியான வார்த்தை பாஜகவின் அரசியல் இந்திய மக்கள் நன்மைக்காக INDIA முஸ்லீம் நேரு காங்கிரஸ் அரசியல் ஒன்றே ஒன்று தான் மோடி ஒழிக பிஜேபி ஒழிக இந்தியாவில் வசிக்கும் தன்னை இந்தியன் என்று எண்ணாமல் தான் வெறும் முஸ்லீம் மட்டும் என்று எண்ணும் அவர்களுக்கு நன்மை செய்வதாக உருட்டு உருட்டுவது காட்டும் தான்???


குமரி குருவி
மே 11, 2024 17:24

உங்க அரசியல் தேச விரோத அரசியல் அந்த வகையில் பா.ஜ.க.அரசியல் வேறுதான்


saravanan
மே 11, 2024 17:15

பழங்குடியின மக்களின் நிலத்தை பெரும் தொழிலதிபர்களுக்கு மோடி கொடுத்து விட்டார் என்று சொல்லும் நீங்கள் கொஞ்சம் பின்னோக்கி பாருங்கள் முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில்தான் வேதாந்தா நிறுவ னத்திற்கு பழங்குடியின மக்கள் அதிகம் வாழும் ஜார்கண்ட், ஒடிசா வனப்பகுதிகளை தாரைவார்க்க எத்தணித்த போது நடந்த மோதல்களும், எதிர்ப்புகளும் நினைவிருக்கிறதா துணிச்சலை பற்றி குறிப்பிட்டு பேசினீர்கள் அசட்டுதனங்களுக்கும், துணிச்சலுக்கும் உள்ள வித்தியாசத்தை நன்றாகவே அறிந்தவர் பிரதமர் மோடி


R Kay
மே 11, 2024 17:10

இந்தியாவின் கலாச்சாரத்தை நன்கு புரிந்து வைத்துள்ளது அதனாலேயே மக்கள் அக்குடும்பத்திற்கு தோல்வி மேல் தோல்வியாக பரிசளித்து வருகிறார்கள்


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி