உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹரியானாவில் தொடரும் பா.ஜ.,வின் அலை; 10 மேயருக்கான தேர்தலில் 9ல் வெற்றி

ஹரியானாவில் தொடரும் பா.ஜ.,வின் அலை; 10 மேயருக்கான தேர்தலில் 9ல் வெற்றி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சண்டிகர்: ஹரியானாவில் 10 மாநகராட்சிகளில் நடந்த மேயருக்கான தேர்தலில் பா.ஜ., 9ல் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சியால் ஒரு மேயர் இடத்தை கூட பிடிக்க முடியவில்லை.ஹரியானாவில் பா.ஜ., ஆட்சிக்கு வந்த பிறகு, பரிதாபாத், ஹிசார், ரோஹ்தக், கர்னல், யமுனா நகர், குருகிராம், மனேசர் உள்ளிட்ட மாநகராட்சிகள் மற்றும் 21 நகராட்சிகளுக்கும் கடந்த மார்ச் 2ம் தேதி தேர்தல் நடைபெற்றது. அதோடு, அம்பாலா, சோனிபட் ஆகிய மாநகராட்சிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்தது. மேலும், கடந்த 9ம் தேதி பானிபட் மாநகராட்சிக்கு தனியாக தேர்தல் நடந்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=e5d5ctam&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மொத்தம் 10 மாநகராட்சிகளுக்கான மேயர் தேர்தலில், பரிதாபாத், அம்பாலா, யமுனா நகர், ஹிசார், கர்னல், ரோஹ்தக், சோனிபட் உள்ளிட்ட 9 மாநகராட்சிகளில் பா.ஜ., வெற்றி பெற்றது. மனேசரில் சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற்றார். குருகிராமில் நடந்த மேயர் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ரிவரல் சீமா பகுஜாவை, 1,79,485 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் பா.ஜ., வேட்பாளர் ராஜ் ராணி தோற்கடித்தார். அதேபோல, மனேசர் மேயருக்கான தேர்தலில் பா.ஜ.,வின் சுந்தர் லாலை, 2,235 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார் சுயேட்சை வேட்பாளர் இந்திரஜித் யாதவ். இதன்மூலம், 10 மாநகராட்சிகளில் ஒரே ஒரு மாநகராட்சி மட்டும் பா.ஜ., வசம் இல்லாமல் போனது. அண்மையில் நடந்த சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்த காங்கிரஸ் கட்சிக்கு, உள்ளாட்சி தேர்தலிலும் படுதோல்வி ஏற்பட்டிருப்பது அக்கட்சிக்கு பெருத்த பின்னடைவாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Iyer
மார் 12, 2025 21:50

மிக சரியாக சொன்னீர்கள். அடுத்து தமிழகத்தில் அண்ணாமலை தலைமையில் பிஜேபி அரசு அமையும்.


sridhar
மார் 12, 2025 18:37

டெல்லி , ஹரியானா … தமிழ்நாடு .


Mecca Shivan
மார் 12, 2025 18:32

இது அலையா அல்லது விரித்த வலையா ? ஏற்கனவே இப்படி ஒரு உள்ளாட்சி தலைவருக்கான மேயர் என்று நினைக்கிறேன் மீண்டும் நடத்தப்பட்டது ..


Priyan Vadanad
மார் 12, 2025 17:21

சட்டிஸ்கரில் மக்கள் விரும்பும் நல்ல ஆட்சி நடக்கிறது என்று நம்ப முடிகிறது. அதனால்தான் காங்கிரசால் மக்கள் மனதினுள் போக முடியவில்லை என்று கருத இடமுண்டு.


vivek
மார் 12, 2025 18:24

பிரியன்..இந்த வடை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா...உங்க ஸ்ருதி குறையுதே....


அசோகன்
மார் 12, 2025 17:01

தமிழ் நாட்டுமக்களை சாராயத்துக்கும் பிரியாணிக்கும் 2000 காசுக்கும் அடிமையா திமுக வச்சியிருக்காங்களே........ 4 லட்சம் கோடி காரணமே இல்லாமல் கடன் வாங்கியது திமுகவின் உலக சாதனை


Velan Iyengaar
மார் 12, 2025 16:27

சண்டிகர் மேயர் தேர்தலில் கடந்த முறை CCTV முன்னாடியே எப்படி என்ன செய்து ஜெயித்தார்கள் என்பதை ஒட்டுமொத்த நாடும் பார்த்ததே.


Jagannathan Narayanan
மார் 12, 2025 17:50

200 rupees granted


Nagarajan D
மார் 12, 2025 18:16

200 ருபாய் உ. பி க்கு 1 ருபாய் increment


guna
மார் 12, 2025 18:25

சிட்னி சந்துல ஜெளுஷில் கிடைக்குமா


Nagarajan D
மார் 12, 2025 16:16

ராகுலின் வெற்றிகரமான 93வது தோல்வி. எல்லோரும் கொண்டாடுவோம் காந்தியின் பெயரை சொல்லி காங்கிரஸ் இல்லா பாரதத்தை கொண்டாடுவோம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை