உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கெஜ்ரிவால் பணி செய்யலாமா? விளக்கம் கேட்கிறது சுப்ரீம் கோர்ட்

கெஜ்ரிவால் பணி செய்யலாமா? விளக்கம் கேட்கிறது சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான கொள்கை ஊழல் வழக்கில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இருப்பினும், சிறையில் இருந்தபடியே முதல்வர் பணிகளை அவர் மேற்கொண்டு வருகிறார்.இதன் காரணமாக, டில்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சில கைதிகளின் தண்டனை குறைப்பு கோப்புகளில், முதல்வர் கையெழுத்திடுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, 'டில்லி முதல்வர் கெஜ்ரிவால் சிறையில் இருந்து தன் பணிகளைச் செய்ய ஏதேனும் தடை உத்தரவு உள்ளதா? இது நுாற்றுக்கணக்கான வழக்குகளை பாதிக்கும் என்பதால், இதை ஆராய விரும்புகிறோம்' என, கேள்வி எழுப்பினர்.அரசிடம் இருந்து இது தொடர்பான அறிவுறுத்தல்களை பெற்ற பின், மீண்டும் நீதிமன்றத்தை தொடர்பு கொள்வதாக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாத்தி தெரிவித்தார். இதை தொடர்ந்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

R.Varadarajan
செப் 07, 2024 16:46

இதுபோல் கேள்விகளை கேட்காமல் தீதித் துறை தன்தீர்ப்பை வெளியிட வேண்டியது தானே?


Jay
செப் 07, 2024 10:49

கெஜ்ரிவால் குற்றம் சாட்டப்பட்டவர் தான் ஆனால் குற்றம் நிரூபிக்கப்படவில்லை. குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்றவர் தமிழ்நாட்டு அமைச்சரவையில் இருப்பது முடியும் என்றால் கெஜ்ரிவாலும் இருக்கலாம் தானே.


SP
செப் 07, 2024 10:03

நேர்மையான மனிதனாக இருந்தால்,இன்னேரம் பதவியை விட்டு விலகியிருக்கவேண்டும்.முன்பு பாஜ தலைவர் திரு அத்வானி அவர்கள் மீது குற்றச்சாட்டு சொன்னதற்கே அனைத்து பொறுப்பிலிருந்தும் ராஜினாமா செய்தார்.நிரபராதி என்று நிருபிக்கும்வரை தேர்தலிலும் போட்டியிடமாட்டேன் சொல்லி அதன்படி நடந்தார்.


vbs manian
செப் 07, 2024 09:21

ஆச்சர்யம். சிறையில் இருப்பவர் எப்படி நிர்வாகத்தில் ஈடுபட முடியும். தவறான முன்னுதாரணத்துக்கு அடி போடுகிறார்கள். தலை சுற்றுகிறது.


venkatan
செப் 07, 2024 08:59

மக்களாட்சியின் யோக்யதாம்சம்


Lion Drsekar
செப் 07, 2024 08:13

நீதிமன்றத்துக்கு அல்லது சிறைக்கு முக்கிய பிரமுகர்கள் சென்றுவிட்டாள் அனைத்து ஊடகங்கள் பத்திரிக்கைகள் அவர்களைப்பற்றிய செய்தியை மட்டுமே வெளியிட்டு மக்களிடம் அனுதாபத்தை ஏற்படுத்தி வருகிறது, ஆனால் அன்றாடம் மக்கள் அனுபவிக்கும் இன்னல்களுக்கு நீதிமன்றம் இதே போன்று தானாக முன்வந்து காப்பாற்றினால் உலகம் உள்ளவரை திரு அப்துல் கலாம் ஐயா, திரு காமராஜர் ஐயா போன்று நினைத்துக்கொண்டு இருக்கும், தலைக்கவசம் போடவில்லை என்றால் கொலை குற்றம் செய்தவர்களைப்போல் விரட்டி விரட்டி பிடிப்பதோடு மட்டும் இல்லாமல் அபராதமும் விதிக்கும் பொது மக்கள் தீய சக்திகளால் பாதிக்கும்போதும் இதே போன்று தடுக்க முன்வந்து காப்பாற்ற அந்த அந்த துறைகளுக்கு அறிவுரை கொடுப்பதோடு மட்டும் நிற்காமல் சட்டமும் கொண்டு வரவேண்டும் . நேர்மையாக இருப்பவர்களே மிக அதிக அளவில் இன்னல்களுக்கு ஆளாகிக்கொண்டு செல்கிறார்கள், மக்களையும் காப்பாற்றுங்கள், வந்தே மாதரம்


M S RAGHUNATHAN
செப் 07, 2024 07:47

மத்திய அரசு கெஜ்ரிவால் அரசு கோப்புகளில் கையொப்பம் இடமுடியாது என்று வாதாடும். உடனே உச்ச நீதி மன்றம் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வை ஏற்படுத்தி ஒரு 15 நாள்.விசாரணை நடத்தி தீர்ப்பை ஒத்தி வைக்கும். தலைமை நீதிபதி பணி மூப்பு அடையும் நாளில் கெஜ்ரிவால் கை எழுத்து இடலாம் என்று முடிவு சொல்லும். எல்லாரும் வீட்டுக்கு போய் பலகாரம் சாப்பிடுங்கள்.


மணியன்
செப் 07, 2024 06:40

இலாகாவே வைத்துக்கொள்ளாமல் திட்டமிட்டு கொள்ளையடித்தவனை இருபது ஐ பலன்களை அழித்து சாட்சியங்களை அழித்த திருடனை சுப்ரீம் கோர்ட் பதவியில் தொடர விட்டிருப்பது விந்தையாக உள்ளது.


Kasimani Baskaran
செப் 07, 2024 05:26

சிறையில் இருந்து கொண்டு வெளியே கொலைகளையே செய்வது கூட நடக்காமல் இல்லை - பின்னர் முதல்வராக மட்டும் ஏன் இருக்க முடியாது. தார்மீக அடிப்படையில் ஒருவர் முதல்வராக இருக்கும் பொழுது கைது செய்யப்பட்டாலேயே கூட தண்டனை பெற வாய்ப்புள்ளதால் பதவி நீக்கம் செய்வதே சரி. ஆனால் இது போன்ற அடிப்படை விஷயங்கள் கூட நீதிமன்றத்துக்கு தெரியாமல் இருப்பது துரதிஷ்ட வசமானது.


Sathyanarayanan Sathyasekaren
செப் 07, 2024 04:09

இந்தியாவிலேயே, இல்லை இல்லை உலகிலேயே, இலாகா பொறுப்பு இல்லாத ஒரே முக்கிய மந்திரி இந்த குஜிலிவால் தான். இது இந்த நீதிபதிகளுக்கு தெரியாதா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை