உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி விமான நிலையத்தில் ரூ.11.28 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்; ஒருவர் கைது

டில்லி விமான நிலையத்தில் ரூ.11.28 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்; ஒருவர் கைது

புதுடில்லி: டில்லி விமான நிலையத்திற்கு கடத்திவரப்பட்ட ரூ.11.28 கோடி மதிப்பிலான கஞ்சா பாக்கெட்டுக்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடந்த பிப்.,21ம் தேதி பாங்காக்கில் இருந்து டில்லி விமான நிலையத்திற்கு வந்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, பயணி ஒருவரின் பையை சோதனையிட்டனர். அதில்,, பிஸ்கட், சாக்லெட்டுக்கள் மற்றும் அரிசி பாக்கெட் போன்ற கவர்களில் பச்சை நிறத்தில் சந்தேகத்திற்குரிய பொருள் இருப்பதை கண்டுபிடித்தனர். பின்னர், அதனை பிரித்து பரிசோதனை செய்ததில், அது கஞ்சா என தெரிய வந்தது. சுமார் 11,284 கிராம் கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.11.28 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, கஞ்சாவை கடத்தி வந்த பயணியை கைது செய்து, இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Kumar
பிப் 24, 2025 12:53

பயணிக்கு எப்போ பெயர் வைக்க போறீங்க


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 24, 2025 13:34

நீங்க என்ன எதிர்பார்த்து செய்தியில் பேரைத் தேடுனீங்களோ, அது உண்மையாத்தான் இருக்கும் ..... பேரைப் போட்டா மார்க்கத்தினருக்கு கோபம் வரும் ..... ஏன் பிரச்னை ன்னு போடலை ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை