மேலும் செய்திகள்
பெரும் தவறு!
7 hour(s) ago
கடற்படை குறித்து பாக்.,கிற்கு தகவல் அனுப்பியவர் கைது
7 hour(s) ago | 1
திருமலையில் தெய்வீக மூலிகை தோட்டம்
7 hour(s) ago
இந்தியா - நியூசிலாந்து பேச்சுகள் வெற்றிகரமாக நிறைவடைந்தன
8 hour(s) ago | 6
பெங்களூரு: காங்கிரஸ் தொண்டரை கடத்தியதாக, பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னா மீது வழக்குப்பதிவாகி உள்ளது.பெங்களூரு, ராஜராஜேஸ்வரி நகர் தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னா, 59. இவர் முன்பு காங்கிரசில் இருந்தவர். 2019ல் பதவியை ராஜினாமா செய்த 17 எம்.எல்.ஏ.,க்களில் முனிரத்னாவும் ஒருவர். இடைத்தேர்தலில் வெற்றி பெற்று, தோட்டக்கலை அமைச்சர் ஆனார்.சமீப காலமாக துணை முதல்வர் சிவகுமார், எம்.பி., சுரேஷ் ஆகியோருடன், முனிரத்னா மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். 'தொகுதிக்கு நிதி தருவது இல்லை' என, அண்ணன் - தம்பி மீது குற்றச்சாட்டு கூறினார்.லோக்சபா தேர்தலில் பெங்களூரு ரூரலில் போட்டியிடும் சுரேஷை தோற்கடிக்க, கங்கணம் கட்டிக் கொண்டு சுற்றுகிறார். இந்நிலையில் முனிரத்னா மீது கடத்தல் வழக்குப்பதிவாகி உள்ளது. மிரட்டல்
பெங்களூரு லக்கரே லட்சுமிதேவிநகரில் வசிப்பவர் சாமுவேல், 55. பெயின்டர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர், 3ம் தேதி சந்திரா லே -அவுட் போலீஸ் நிலையத்தில் அளித்த புகார்:கடந்த 1ம் தேதி மாலை 4:40 மணிக்கு என் வீட்டிற்கு வந்த எம்.எல்.ஏ., முனிரத்னாவின் ஆதரவாளர்கள் சுரேஷ், வசந்த், வாசிம், சீனா ஆகியோர், முனிரத்னா அழைப்பதாக கூறினர். அவர்களுடன் செல்ல மறுத்தேன்.என்னை வலுக்கட்டாயமாக, ராஜ்குமார் நினைவிடம் அருகில் அழைத்துச் சென்றனர். பின்னர் வயாலிகாவலில் உள்ள, எம்.எல்.ஏ., முனிரத்னா அலுவலகத்திற்கு கடத்திச் சென்றனர். அங்கு வைத்து முனிரத்னாவும், அவரது ஆதரவாளர்களும், பா.ஜ.,வில் இணையும்படி என்னை மிரட்டினர். அதற்கு மறுத்ததால் எனக்கு மிரட்டல் விடுத்தனர். புகைப்படம்
பா.ஜ., சால்வையை எனது கழுத்தில் அணிந்து, புகைப்படம் எடுத்தனர். பின்னர் மீண்டும் வீட்டின் அருகில் விட்டுச் சென்றனர். எனது கழுத்தில் பா.ஜ., சால்வை அணிந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர்.இதன்மூலம் பணத்திற்கு ஆசைப்பட்டு, பா.ஜ.,வில் இணைந்ததாக என் மீது காங்கிரஸ் தலைவர்களுக்கு, வருத்தம் ஏற்பட்டு உள்ளது. என்னை கடத்திய முனிரத்னா, ஆதரவாளர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு புகாரில் கூறப்பட்டு இருந்தது.அந்த புகாரின்பேரில் முனிரத்னா, ஆதரவாளர்கள் 4 பேர் மீது, கடத்தல் வழக்குப்பதிவாகி உள்ளது.இதுகுறித்து சந்திரா லே -அவுட் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமண் கூறுகையில், ''எம்.எல்.ஏ., முனிரத்னா, அவரது ஆதரவாளர்கள் 4 பேர் மீது, வழக்குப்பதிவாகி உள்ளது. கண்காணிப்பு கேமராக்களில் பதிவான, காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம்,'' என்றார்.
7 hour(s) ago
7 hour(s) ago | 1
7 hour(s) ago
8 hour(s) ago | 6