உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உறவினரை தாக்கி நிர்வாண வீடியோ பர்னிச்சர் கடைக்காரர் மீது வழக்கு

உறவினரை தாக்கி நிர்வாண வீடியோ பர்னிச்சர் கடைக்காரர் மீது வழக்கு

சுப்பிரமணியபுரா : அதிக சம்பளம் கொடுத்தால் வேலை செய்வதாக கூறிய உறவினரை தாக்கி, நிர்வாண வீடியோ எடுத்த பர்னிச்சர் கடைக்காரர் மீது வழக்குபதிவாகி உள்ளது.பெங்களூரு, உத்தரஹள்ளியை சேர்ந்தவர் ஷெசாவாலா, 50. உத்தரஹள்ளி மெயின் ரோட்டில், 'பர்னிச்சர்' கடை நடத்துகிறார். இவரது கடையில் ஆந்திராவை சேர்ந்த ஷெரீப், 25 என்பவர், இரண்டு ஆண்டுக்கு முன், வேலைக்கு சேர்ந்தார். இவர்கள் இருவரும் உறவினர்கள். அதிக சம்பளம் தருவதாக கூறி ஷெரீப்பை, ஷெசாவாலா வேலைக்கு அழைத்து வந்தார்.ஆனால் கூறிய சம்பளத்தை கொடுக்காமல், அதை விட குறைவாக கொடுத்ததுடன், இரவு, பகல் பாராமல் வேலை வாங்கி உள்ளார். இதனால் கடந்த மே மாதம், வேறு பர்னிச்சர் கடைக்கு ஷெரீப் வேலைக்கு சென்றார். இதுபற்றி அறிந்த ஷெசாவாலா, அவரிடம் மொபைல் போனில் பேசி, தனது கடைக்கு மீண்டும் வேலைக்கு வரும்படி கூறி உள்ளார்.கடந்த ஜூலை 24ம் தேதி, ஷெசாவாலா கடைக்கு ஷெரீப் சென்றார். அதிக சம்பளம் கொடுத்தால், வேலை செய்வதாக கூறி உள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. ஷெரீப்பை பிடித்து ஒரு அறைக்குள் தள்ளி, அவரை நிர்வாணமாக்கி ஷெசாவாலா தாக்கி உள்ளார். மொபைல் போனில் வீடியோவும் எடுத்தார். பின், ஷெரீப் ஆந்திராவுக்கு சென்று விட்டார்.ஷெரீப்பை நிர்வாணமாக்கி தாக்கிய வீடியோ, சில தினங்களுக்கு முன் சுப்பிரமணியபுரா போலீசாருக்கு கிடைத்தது. ஷெரீப்பிடம் மொபைல் போனில் போலீசார் பேசினர். பெங்களூரு வந்து புகார் அளிக்கும்படி கூறினர். ஆனால், அவர் மறுத்து விட்டார்.ஆனாலும் ஷெரீப்பிடம், மனித உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஒருவர் பேசி, ஆந்திராவில் இருந்து வரவழைத்தார். நேற்று முன்தினம் இரவு, பெங்களூரு வந்த ஷெரீப், ஷெசாவாலா மீது போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி