உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கே.ஆர்.எஸ்., வேட்பாளர் மீது வழக்கு பதிவு 

கே.ஆர்.எஸ்., வேட்பாளர் மீது வழக்கு பதிவு 

தங்கவயல், : னுமதி பெறாமல் தேர்தல் பிரச்சாரம் செய்ததாக கே.ஆர்.எஸ்., வேட்பாளர் உட்பட இருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.கோலார் லோக்சபா தொகுதியில் கே.ஆர்.எஸ்., எனும் கர்நாடக ராஷ்டிரிய சமிதி கட்சி வேட்பாளராக மகேஷ் என்பவர் போட்டியிடுகிறார். இவருக்காக, பேத்தமங்களா பஸ் நிலையம் அருகில் கட்சி தலைவர் ரவிகிருஷ்ணா ரெட்டி, டெம்போ ஒன்றில் நின்று பிரசாரம் செய்தார். தேர்தல் நிதியும் வசூல் செய்தார்.இதை பார்த்த தேர்தல் அதிகாரிகள், பிரசாரத்துக்கு அனுமதி பெறப்பட்டதா என கேள்வி கேட்டனர். இதனால், கோபமடைந்த ரவி கிருஷ்ணா ரெட்டி, தேர்தல் அதிகாரிகளை திட்டினாராம்.இது பற்றி பேத்தமங்களா போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. வேட்பாளர் மகேஷ், கட்சி தலைவர் ரவி கிருஷ்ணா ரெட்டி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை