புதுடில்லி: சி.பி.எஸ்.இ., 10, பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 13) வெளியிடப்பட்டன. மாணவர்களை விட மாணவிகள் 6.4 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. https://cbseresults.nic.in/ என்ற இணையதளத்தில் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். தேர்வு மதிப்பெண் சான்றிதழை டிஜி லாக்கர் செயலி மூலமாகவும் மாணவ, மாணவிகள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4yy7gmb8&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பிளஸ் 2
பிளஸ் 2வில் சென்னை மண்டலத்தில் 98.47 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிகபட்சமாக திருவனந்தபுரம் மண்டலத்தில் 99.91 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 6.4 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தமாக மாணவிகள் 91.52 சதவீதமும், மாணவர்கள் 85.12 சதவீதமும், மூன்றாம் பாலினத்தவர் 50 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட 0.65 சதவீத மாணவ, மாணவிகள் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ம் வகுப்பில் 93.60 % தேர்ச்சி
நாடு முழுவதும் மொத்தம் 22.38 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில், 20.95 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வெழுதிய மொத்த மாணவ, மாணவிகளில் 93.60 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னையில் 99.30 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்தாண்டை விட இந்தாண்டில் 0.48 % அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மாணவர்களுக்கு மோடி வாழ்த்து
'சி.பி.எஸ்.சி., 12ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். உங்களது இடைவிடாத அர்ப்பணிப்பைக் கண்டு நான் மிகவும் பெருமைப்படுகிறேன். உங்களின் எதிர்கால முயற்சிக்கு நல்வாழ்த்துகள்' என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.