உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரேணுகாசாமி வழக்கில் தயாராகும் குற்றப்பத்திரிகை

ரேணுகாசாமி வழக்கில் தயாராகும் குற்றப்பத்திரிகை

பெங்களூரு : ரேணுகாசாமி கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தயாரிப்புப் பணியில் போலீசார் மும்முரமாக ஈடுபட்டுஉள்ளனர்.சித்ரதுர்காவைச் சேர்ந்தவர் ரேணுகாசாமி, 33. இவரை கொலை செய்த வழக்கில் நடிகர் தர்ஷன், அவரது தோழி பவித்ரா உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டு, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இந்த கொலை வழக்கில் குற்றவாளிகள் அணிந்திருந்த உடைகள், கொலை செய்ய பயன்படுத்திய இரும்பு கம்பிகள், எலக்ட்ரிக் மின்சாதன பொருட்கள், நேரில் கண்டவர்களிடம் விசாரணை உட்பட 200க்கும் மேற்பட்ட சாட்சியங்களை போலீசார் சேகரித்துள்ளனர்.பொதுவாக ஒரு வழக்கில், 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். ரேணுகாசாமி கொலை நடந்து, நேற்றுடன் ஒரு மாதம் ஆகிவிட்டது. இதுவரை சேகரித்த சாட்சியங்களை வைத்து, குற்றப்பத்திரிகை தயாரிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இது குறித்து, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் பெங்களூரில் நேற்று அளித்த பேட்டியில், ''ரேணுகாசாமி கொலை வழக்கில் யாரையும் காப்பாற்றும் எண்ணம் அரசிடம் இல்லை. ''நான் ஆரம்பத்தில் இருந்தே இதை கூறி வருகிறேன். விசாரணை, சாட்சியங்களை வைத்து குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்வர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ