மேலும் செய்திகள்
திருவனந்தபுரம் டிஐஜி அஜீதா பேகத்திற்கு முதல்வர் விருது
2 hour(s) ago | 1
தொழில்நுட்பக்கோளாறு; 100க்கும் மேற்பட்ட விமான சேவை பாதிப்பு
5 hour(s) ago | 4
தோல்வியை அறிந்து விட்டனர்!
8 hour(s) ago | 1
பெங்களூரு: உஜ்ஜயினி அணையில் இருந்து, பீமா ஆற்றுக்கு தண்ணீர் திறந்து விடும்படி, மஹாராஷ்டிர அரசிடம், கர்நாடக முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது தொடர்பாக, ஐ.டி., -- பி.டி., துறை அமைச்சர் பிரியங்க் கார்கே கூறியதாவது:கர்நாடகாவில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. கலபுரகி, பெலகாவி, விஜயபுரா, பாகல்கோட், யாத்கிர், ராய்ச்சூர் உட்பட, பல மாவட்டங்களில் குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதற்கு தீர்வு காண, மாநில அரசு தேவையான நடவடிக்கை எடுத்துள்ளது.வட மாவட்டங்களில், மழை பற்றாக்குறையால் அணைகளில் நீர் மட்டம் குறைந்துள்ளது. தற்போது இருப்புள்ள தண்ணீர் குடிநீருக்கும், கால்நடைகளின் தேவைக்கும் போதாது. எனவே, கொய்னா அணையில் இருந்து, கிருஷ்ணா ஆற்றுக்கு, 2 டி.எம்.சி., தண்ணீர் திறந்து விடும்படி கோரி, மஹாராஷ்டிர முதல்வருக்கு, நமது முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.முதல்வர் எழுதிய கடிதத்துக்கு, மஹாராஷ்டிர அரசு பதிலளிக்கவில்லை. எனவே, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, மஹாராஷ்டிரா அதிகாரிகளுக்கு நெருக்கடி அளிக்கப்படுகிறது.கலபுரகி, அப்சல்புராவின், குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண பீமா ஆற்றுக்கு தண்ணீர் திறந்து விட முயற்சி நடக்கிறது. இதற்கிடையில் அலமாட்டி, நாராயணபுரா அணைகளில் இருந்து, சொன்னே தடுப்பணைக்கு தண்ணீர் கொண்டு வர முயற்சிக்கிறோம்.குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண, பண பற்றாக்குறை இல்லை. பஞ்சாயத்து கணக்கில் 16 கோடி ரூபாய், கிராமிய குடிநீர் பிரிவு கணக்கில் 127 கோடி ரூபாய் உள்ளது. கிராமப்புறங்களில் போர்வெல்களை வாடகைக்கு எடுத்து, டேங்கர்கள் மூலமாக குடிநீர் வழங்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
2 hour(s) ago | 1
5 hour(s) ago | 4
8 hour(s) ago | 1