நட்சத்திர பட்டாளங்கள்நடிகர் தனஞ்செய் நாயகனாக நடிக்கும், கோடி படத்தில் நடிகர் துனியா விஜய், சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த காட்சி, மிகவும் உணர்ச்சிபூர்வமாக உள்ளது. ரசிகர்களின் கண்களில் கண்ணீரை வரவழைக்கும் விதமாக உள்ளது. இதற்கு முன் துனியா விஜய் முதன் முறையாக இயக்கி நடித்த, சலகாவில், தனஞ்செயா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்போது இவரது படத்தில், துனியா விஜய் நடித்துள்ளார். நடிகர்கள் இது போன்று, ஒருவர் படத்தில் மற்றொருவர் நடிப்பது சகஜம்தான். கோடி படத்தில் மோக்ஷா குஷால், ரங்காயணா ரகு, தாரா உட்பட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளன.தயாரிப்பாளர் தவிப்புநடிகர் தர்ஷனின், டெவில் படத்தை திரையிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். அவரும் தொடர்ந்து படப்பிடிப்பில் பங்கேற்றார். இதே டிசம்பரில் துருவா சர்ஜா நடிக்கும், கேடி திரைக்கு வரவுள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு ஸ்டார் நடிகர்களின் படங்கள், திரையரங்குகளில் போட்டி போடும் என, ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ரேணுகாசாமி கொலை வழக்கில், தர்ஷன் சிக்கியுள்ளதால், டெவில் படப்பிடிப்பு நின்றுள்ளது. படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்று தெரியவில்லை. இதனால் தயாரிப்பாளர் தவியாய் தவிக்கிறார். பாசப்பிணைப்பு கன்னட திரையுலகின் பிரபல இலக்கியவாதியும், வசன கர்த்தாவுமான மளவல்லி சாயி கிருஷ்ணா, நீண்ட நாட்களுக்கு பின், மீண்டும் படம் இயக்குவதற்கு சென்று உள்ளார். இளம் நடிகர் கிராந்தி கதை எழுதி, நாயகனாக நடிக்கும் ராகா படம் தயாராகிறது. அமைச்சர் சிவராஜ் தங்கடகி சமீபத்தில், கிளாப் அடித்து படப்பிடிப்பை துவக்கி வைத்து, படக்குழுவினரை வாழ்த்தினார். தந்தை, பிள்ளைகள் இடையிலான பாசப்பிணைப்பை உணர்த்தும் படமாகும். தந்தை தங்களின் பிள்ளைகளை எப்படி பாதுகாக்கின்றார்; இதே பிள்ளைகள் பெற்றோரை எப்படி நடத்துகின்றனர் என்பதை, படத்தில் காண்பித்துள்ளனர்.சிரிக்க வைக்க ஆசைஆரண்ய காண்டா, டியர் சத்யா உட்பட, 12 படங்களில் நடித்தவர் நடிகை அர்ச்சனா கொட்டிகே. ஒவ்வொன்றிலும் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தற்போது கன்னடம் மட்டுமின்றி, தெலுங்கில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார். முக்கிய கதாபாத்திரங்கள் மற்றும் துணை கதாபாத்திரங்களில் நடித்த இவர், இப்போது சந்திரமோகன் இயக்கும் பாரெஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் நாயகியாக நடிக்கிறார். வனப்பகுதியில் நடிக்கும் திரில்லிங் கதை கொண்டது. கை நிறைய படங்கள் வைத்துள்ள இவருக்கு, முழு நீள நகைச்சுவை படத்தில் நடிக்க வேண்டும் என்பது கனவு.நாயகியின் குரல்நடிகை அக்ஷதா பாண்டவபுரா, முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் கவுமுதி படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது. சர்வதேச விருது பெற்ற கந்தீலு படத்தை இயக்கிய யசோதா பிரகாஷ், கவுமுதி படத்தை இயக்குகிறார். கலைப்படங்களை தயாரித்து, அடையாளம் காணப்பட்டவர் யசோதா. இப்போதும் அதே போன்ற கதையை கையில் எடுத்துள்ளார். கல்வி இல்லாமையால், மூட நம்பிக்கை அதிகரிக்கிறது. உண்மையான வழிபாடு, மூட நம்பிக்கைக்கு இடையிலான வித்தியாசங்கள் குறித்து, படத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. மூட நம்பிக்கைக்கு எதிராக, நாயகி குரல் எழுப்பி போராடுவதே கதையாகும்.ரசிகர்கள் ஏமாற்றம்உத்தரகாண்டா படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. படப்பிடிப்பு செட்டுக்கு, நடிகை ரம்யா திடீர் வருகை தந்து, படக்குழுவினரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இந்த படத்தின் மூலம், ரம்யா மீண்டும் திரையுலகுக்கு திரும்புவதாக கூறப்பட்டது. ஆனால் அவர் நடிக்காதது, ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. அவர் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில், சைத்ரா ஆச்சார் நடிக்கிறார். ரம்யா தற்போது அரசியல், சினிமா இரண்டில் இருந்தும் ஒதுங்கியுள்ளார். அவரை திரையில் காண, ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.