உள்ளூர் செய்திகள்

சினி கடலை

நல்ல கதாபாத்திரம் உள்ளதா?சின்னத்திரை மூலமாக, நடிப்புக்கு வந்த நடிகை மயூரி, அதன்பின் வெள்ளித்திரையிலும் நாயகியாக ஜொலித்தார். பல வெற்றி படங்களில் நடித்தார். பட வாய்ப்புகள் குவிந்த நிலையில், திடீரென திருமணம் செய்து கொண்டு, காணாமல் போனார். சில ஆண்டுகள் இடைவெளிக்கு பின், மீண்டும் நடிப்புக்கு திரும்பியுள்ளார். நன்ன தேவ்ரு என்ற சின்னத்திரை தொடரில் நடிக்கிறார். சிறிய ஊரில் வசிக்கும், ஏழை நர்ஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தந்தையை பிடிக்காத மகள் கதாபாத்திரம். மகளின் அன்பை பெற போராடும் தந்தை, அதில் வெற்றி பெறுவாரா என்பதே கதையின் சாராம்சமாகும். நல்ல கதை, கதாபாத்திரங்கள் கிடைத்தால், படத்திலும் நடிக்க, மயூரி தயாராக இருக்கிறாராம்.முதல் குழந்தை ரிலீஸ்நடிகை ஹர்ஷிதா பூனச்சா ரசிகர்களுக்கு, இனிப்பான செய்தி வந்துள்ளது. ஏராளமான வெற்றி படங்களில் நடித்துள்ள இவர், சமூக சேவைகளிலும் ஈடுபாடு கொண்டவர். கொரோனா நேரத்தில் தன் நீண்ட நாள் நண்பரான புவன் பொன்னன்னாவுடன் சேர்ந்து, பலருக்கு உணவு, மருந்துகள், சிகிச்சைக்கு தேவையான பொருட்களை மக்களுக்கு வழங்கினார். 2023ன் ஆகஸ்ட் 24ல் ஹர்ஷிகா - புவன் திருமணம் நடந்தது. நடிப்பை ஒதுக்கி குடும்பத்தை கவனித்தார். தற்போது ஹர்ஷிகா கர்ப்பம் அடைந்துள்ளார். தம்பதி, தங்களின் முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த தகவலை ஹர்ஷிகா ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.பழிவாங்கும் படலம்கன்னடத்தில் பழிவாங்கும் கதை, ஏராளமாக வந்துள்ளன. அந்த வரிசையில் துாபான் என்ற படமும் சேர்ந்துள்ளது. இதற்கு முன் படத்துக்கு, பைர்யா - 07 என பெயர் வைக்கப்பட்டது. அதன்பின் வித்தியாசமான இருக்கட்டும் என்பதால், பெயரை மாற்றினார்களாம். இதில் ரோஷன் நாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அனுஷா ராய் தேர்வு செய்யப்பட்டார். 1994ல் நடக்கும் கதையாகும். தந்தைக்கு நடந்த அநியாயத்துக்கு எதிராக, மகன் பழிவாங்கும் திரைக்கதையாகும். 50 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ளது. மிச்சத்தையும் முடித்து விரைவில் திரைக்கு கொண்டு வர, படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.அடுத்த மாதம் கவுரி வருகைஇயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் இயக்கிய கவுரி படத்தை ஆகஸ்ட் 15ல் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளார். இதில் அவரது மகன் சமர்ஜித் லங்கேஷ், நாயகனாக அறிமுகமாகிறார். சான்யா அய்யர் நாயகியாக நடித்துள்ளார். சமீபத்தில் பிரமாண்ட நிகழ்ச்சி நடத்தி, படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. ஆகஸ்டில் சுதந்திர தினம், வரமஹாலட்சுமி பண்டிகை, ரக்ஷா பந்தன் என, தொடர் விடுமுறைகள் வருகின்றன. எனவே அந்த மாதம் படத்தை திரையிட படக்குழுவினர் தயாராகின்றனர்.ரசிகர்கள் எதிர்பார்ப்புநடிகர் பிரஜ்வல் தேவராஜ், சமீப நாட்களாக மாறுபட்ட கதாபாத்திரங்களை தேர்வு செய்து கொள்கிறார். இதுவரை ஆக்ஷன் படங்களில் நடிப்பு திறனை வெளிப்படுத்திய இவர், தற்போது ராட்ஷசா என்ற ஹாரர் படத்தில் நடிக்கிறார். பிரஜ்வலின் பிறந்த நாளான ஜூலை 4ல், படத்தின் முதல் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டனர். அதில், அவர் ராட்ஷசன் போன்றே தென்படுகிறார். டைட்டிலுக்கு தக்கபடியே உள்ள போஸ்டர், ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. படப்பிடிப்பை ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடத்த, படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். 55 நாட்களில் படப்பிடிப்பை முடிக்கவும் ஆலோசிக்கின்றனர்.பெயர் மட்டும் பழசுநடிகர் அனந்த் நாக், லட்சுமி நாயகன், நாயகியாக நடித்திருந்த நா நின்ன பிடலாரே திரைப்படம், ரசிகர்களை மிகவும் கவர்ந்த பேய்ப்படம். நன்றாக ஓடி வசூலை அள்ளியது. தற்போது அதே பெயரில், திரைப்படம் தயாராகிறது. ஹேமந்த் ஹெக்டே, அபூர்வா நாயகன், நாயகியாக நடிக்கின்றனர். படத்தில் பாவனா ராமண்ணா, பேய் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் பெயரை தவிர, பழைய படத்துக்கும், இப்போதைய படத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. வித்தியாசமான கதை கொண்டது. படத்தின் இயக்குனர் ஹேமந்த் ஹெக்டேதான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை