உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சர்வாதிகாரத்தால் சிறையில் இருக்கிறார் முதல்வர்: கெஜ்ரிவால் மனைவி குற்றச்சாட்டு

சர்வாதிகாரத்தால் சிறையில் இருக்கிறார் முதல்வர்: கெஜ்ரிவால் மனைவி குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை, சர்வாதிகாரத்தால் சிறையில் அடைக்க முடியும். ஆனால் இதயத்தில் உள்ள தேசபக்தியை எப்படி தடுத்து நிறுத்த முடியும்? என டில்லி முதல்வர் கெஜ்ரிவால் மனைவி சுனிதா கேள்வி எழுப்பி உள்ளார்.சுதந்திர தினத்தையொட்டி, சமூக வலைதளத்தில் டில்லி அமைச்சர் அதிஷி வெளியிட்ட அறிக்கை: 1947ம் ஆண்டு பிரிட்டிஷ் சர்வாதிகாரத்தில் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற தினம் இன்று. நூற்றுக்கணக்கான விடுதலைப் போராளிகள் தடியடியை எதிர்கொண்டு, சிறைக்குச் சென்று, உயிரைத் தியாகம் செய்தார்கள்.சுதந்திர இந்தியாவில், முதல்வர் ஒருவர் பொய் வழக்கில், மாதக்கணக்கில் சிறையில் அடைக்கப்படுவார் என்ற எண்ணம் அவர்களது கனவில் கூட தோன்றியிருக்காது. சர்வாதிகாரத்திற்கு எதிராக இறுதி மூச்சு வரை போராடுவோம் என்று இந்த சுதந்திர தினத்தில் உறுதிமொழி எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

கெஜ்ரிவால் மனைவி சுனிதா

''இன்று முதல்வர் இல்லத்தில் தேசிய கொடி ஏற்றப்படவில்லை. மிகவும் வருத்தம். தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை சர்வாதிகாரத்தால் சிறையில் அடைக்க முடியும். ஆனால் இதயத்தில் உள்ள தேசபக்தியை எப்படி தடுத்து நிறுத்த முடியும்?'' என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

vadivelu
ஆக 15, 2024 17:56

பொய் வழக்கு என்றால் ஏன் ஆதாரத்தோடு கேஸ் போட இல்லை. உண்மையில் யார் திருடி இருக்கிறார்களோ அவர்களை திருடியதை திருப்பி கொடுக்க சொல்லுங்க மேடம்.


Ramakrishnan Sathyanarayanan
ஆக 15, 2024 17:46

சரியாக சொன்னீர்கள், கெஜ்ரிவாலின் சர்வாதிகாரத்தால் கெஜ்ரிவால் சிறையிலிருக்கிறார் என்றும் பொருள் வருகிறது


சந்திரசேகர்
ஆக 15, 2024 15:28

கெஜ்ரிவால் மனைவியாக நான் என்ன சொல்றேன்னா ஊழல் பண்ணினால் காங்கிரஸ் கட்சி மாதிரி கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டும். அதைவிட்டு விட்டு ஜெயில்லயா பிடிச்சி போடுறது. இது ரொம்ப தப்பு. நாங்கள் ஆட்சிக்கு வந்தது அவியல் செய்ய வரவில்லை. பணம் சம்பாதிக்க வந்தோம்.


KRISHNAN R
ஆக 15, 2024 14:20

கிட்ட தட்ட 80 சத வீத கொள்முதல் கொள்ளை வழி வகுதாவர்.... நல்லவர்....


RAJ
ஆக 15, 2024 14:05

அப்போ, அய்யா ஊழல் செய்யலன்னு சொல்றிங்க, அப்டிதானே


ganapathy
ஆக 15, 2024 13:47

இந்தாளு கொடி ஏத்தினாதான் அவமானம்


Sridhar
ஆக 15, 2024 13:25

இப்படியே சிறையில் இருக்கும் ஒவ்வொரு குற்றவாளிகளும் சொன்னால், நாட்டின் நிலை என்னவாகும்? இவங்க என்ன சொல்லவர்றாங்க? அரசு இயந்திரங்கள் கைது செஞ்சுச்சு, ஆனா கோர்ட்டு சிலபேர விடுதலை செஞ்சும் இருக்கே? கோர்ட்டு பெயில் கொடுக்கலேன்னா சர்வாதிகாரமா? அப்போ கோர்ட்யே குத்தம் சொல்றாங்களா? தப்பும் செஞ்சு, மாட்டிக்கினதுக்கப்புறமும் வீறாப்பா நம்ம நாட்டு அரசியல்வாதிகளினால்தான் பேசமுடியும். இந்த மாதிரி ஆட்களுக்கு மக்கள் எப்படித்தான் ஒட்டு போடுறாங்களோ


Shekar
ஆக 15, 2024 13:01

எங்க அணில் அமைச்சர்கூட இததான் சொல்றார். அண்ணன் ஜாஃபர் சாதிக்கும் இதையேதான் சொல்றார். என்ன ஒரு ஒற்றுமை பாத்தீங்களா.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 15, 2024 12:55

இவர் இப்படிப்பேசினால் மக்கள் இன்னும் கெஜ்ரிவாலை வெறுப்பார்கள் .... தில்லி மக்களவைத் தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றதை எண்ணிப்பார்க்க வேண்டும் ....


palanivel
ஆக 15, 2024 12:41

சர்வாதிகாரி யாரு ஊழல் செய்து கம்பி எண்ணிக்கொண்டு இருக்கும் உங்க கணவருதானே??????


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை