உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மலை மஹாதேஸ்வரா கோவில் உண்டியலில் ரூ.3.04 கோடி வசூல்

மலை மஹாதேஸ்வரா கோவில் உண்டியலில் ரூ.3.04 கோடி வசூல்

சாம்ராஜ்நகர் : பிரசித்தி பெற்ற மலை மஹாதேஸ்வரா மலை கோவிலில், 34 நாட்களில் 3.04 கோடி ரூபாய் காணிக்கை வசூலானது.சாம்ராஜ்நகர் ஹனுாரின் மலை மஹாதேஸ்வரா மலை கோவில் பிரசித்தி பெற்றது. கர்நாடகாவின் பணக்கார கோவில்களில், இதுவும் ஒன்று. ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் பெறுகிறது. உள்நாடு, வெளி நாடுகளில் இருந்து தினமும், ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணியர் வருகின்றனர்.கோவில் உண்டியல் 34 நாட்களுக்கு பின், நேற்று முன் தினம் திறக்கப்பட்டது. மலை மஹாதேஸ்வரா மலை பஸ் நிலையம் அருகில் உள்ள வணிக வளாகத்தில் போலீசார், கண்காணிப்பு கேமராக்களின் பாதுகாப்புடன், காலை 8:00 மணிக்கு எண்ணும் பணி துவங்கியது. இரவு 11:30 மணி வரை நடந்தது.உண்டியலில் 3.04 கோடி ரூபாய் காணிக்கை வசூலாகியிருந்தது. 115 கிராம் தங்கம், 2.964 கிலோ வெள்ளி, 52 சிங்கப்பூர் டாலர், 27 வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் காணிக்கையாக வந்துள்ளன. ஆன்லைன் வழியாக 3.53 லட்சம் ரூபாய் காணிக்கை செலுத்தப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை