உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கன்னட திரையுலகிலும் கமிட்டி; ஸ்ருதி ஹரிஹரன் எதிர்பார்ப்பு

கன்னட திரையுலகிலும் கமிட்டி; ஸ்ருதி ஹரிஹரன் எதிர்பார்ப்பு

பெங்களூரு : பெங்களூரில் நேற்று நடிகை ஸ்ருதி ஹரிஹரன் அளித்த பேட்டி:ஒவ்வொரு திரை உலகிலும், ஒவ்வொரு பிரச்னை உள்ளது. பாலியல் சுரண்டல் மட்டும் இல்லை. பல பிரச்னைகள் உள்ளன. நடிகைகள், சக கலைஞர்கள் மோசமாக நடத்தப்படுகின்றனர்.படப்பிடிப்பு தளங்களில் கழிப்பறை வசதி கூட செய்து தருவது இல்லை. கேரள அரசின் ஹேமா கமிட்டி அறிக்கை மீது எனக்கு மரியாதை உள்ளது. அந்த அரசின் துணிச்சலான முடிவுக்கு எனது பாராட்டுகள்.கன்னட திரைத் துறையிலும் என்ன நடக்கிறது என்பதை அறிய, அரசு கமிட்டி அமைக்க வேண்டும். நான் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு நடிகருக்கு எதிராக குரல் எழுப்பியபோது, பலர் என்னை சுதந்திரமாக பேச விடவில்லை. சினிமாவில் பாகுபாடுகள் ஒழிய வேண்டும். 'மீ டூ' ஓரளவு பயனுள்ளதாக இருந்தது.இவ்வாறு அவர் கூறினார்.பிரபல நடிகர் அர்ஜுனுடன் 'விஸ்மயா' என்ற கன்னட படத்தில், ஸ்ருதி ஹரிஹரன் நடித்தார். படப்பிடிப்பின்போது அர்ஜுன் பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீசில் புகார் செய்தார். அந்த வழக்கை விசாரித்த போலீசார், அர்ஜுன் மீது குற்றமில்லை என, நீதிமன்றத்தில் 'பி' அறிக்கை தாக்கல் செய்தனர். அதை நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது.''கன்னட திரைத்துறையில் என்ன நடக்கிறது என்பதை அறிய கமிட்டி அமைக்க வேண்டும்,'' என, அரசுக்கு, நடிகை ஸ்ருதி ஹரிஹரன் கோரிக்கை வைத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி