உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கணவரை தேடுவதில் அலட்சியம் போலீசார் மீது கமிஷனரிடம் புகார்

கணவரை தேடுவதில் அலட்சியம் போலீசார் மீது கமிஷனரிடம் புகார்

பெங்களூரு: கடந்த எட்டு நாட்களுக்கு முன் காணாமல் போன கணவரை கண்டுபிடித்துத் தரும்படி, அவரது மனைவி, 'எக்ஸ்' சமூக வலைதளம் வாயிலாக நகர போலீஸ் கமிஷனரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். புகார் அளித்தும் போலீசார் அலட்சியமாக செயல்படுவதாகவும் அதில் குற்றம் சாட்டியுள்ளார்.உ.பி., மாநிலம், லக்னோவை சேர்ந்தவர் விபின், 37. பெங்களூரு மான்யதா டெக் பார்க்கில் உள்ள நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுனராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ஸ்ரீஅபர்ணா தத்தா. இவர்களுக்கு 14 வயதிலும், 5 மாதத்திலும் இரு பெண் குழந்தைகள் உள்ளனர். மூன்று ஆண்டு களாக பெங்களூரில் வசித்து வருகின்றனர்.

கோரிக்கை

நேற்று முன்தினம், ஸ்ரீஅபர்ணா தத்தா, நகர போலீஸ் கமிஷனருக்கு, 'எக்ஸ்' சமூக வலைதளத்தில், 11:30 நிமிடங்கள் ஓடும் வீடியோ மூலம், கோரிக்கை விடுத்துள்ளார்.வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:என் கணவர் ஆக., 4ம் தேதி மதியம் 12:44 மணியளவில், என்னிடம் கூறாமல், தான் அணிந்திருந்த டி - ஷர்ட் உடன், 'கவசாக்கி நிஞ்சா' மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார். சிறிது நேரத்தில் அவரை தொடர்பு கொண்டபோது, அவரது மொபைல் போன் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. இரவாகியும், அவர் வீடு திரும்பவில்லை.இது பற்றி கொடிகேஹள்ளி போலீசில் புகார் செய்தேன். ஆனால், இன்ஸ்பெக்டர் சுனில் மெத்தனமாக இருந்தார். ஆக., 6ம் தேதி மீண்டும் வலியுறுத்திய பின்னரே, எப்.ஐ.ஆர்., பதிவு செய்தனர். அவ்வப்போது வழக்கு தொடர்பாக கேட்டபோது, எந்த பதிலும் சொல்லவில்லை.இதனால் வெறுப்படைந்த நான், 'ஏ.சி.பி.,யின் மொபைல் போன் எண்ணை கண்டுபிடித்து, அவருக்கு, 'வாட்ஸாப்' மூலம் தகவல் தெரிவித்தேன். எந்த பதிலும் வரவில்லை.

அலைக்கழிப்பு

ஆக., 9ம் தேதி அம்ருதஹள்ளி போலீஸ் நிலையத்தில் டி.சி.பி., சஞ்சீத்தை சந்தித்து, நிலைமையை விளக்கினேன். அவர், கொடிகேஹள்ளி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் லட்சுமிபதியை சந்திக்குமாறு கூறினார். ஆனால், அவரோ, ஆக., 10 முதல் 16ம் தேதி வரை விடுமுறையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.இதன்பின், இந்த வழக்கு விசாரணையை, இன்ஸ்பெக்டர் சுனில் கவனிப்பார் என்று மேல் அதிகாரிகள் தெரிவித்தனர். அதன் பின்னரும் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை.வீட்டை விட்டு என் கணவர் வெளியே சென்ற பின், அவரது வங்கிக் கணக்கில் இருந்து 1.80 லட்சம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டு உள்ளது. அவரின் மொபைல் போன் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு உள்ளது. அவருக்கு ஏதோ ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனக்கு பயமாக உள்ளது. அவருக்காக இரு குழந்தைகள் காத்திருக்கின்றனர். அவர்களை அனாதையாக்கி விட வேண்டாம். எனக்கு உதவுங்கள்.இவ்வாறு அவர் பேசி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி