மேலும் செய்திகள்
இந்தியா - சீனா இடையே அக்.,26 முதல் நேரடி விமான சேவை
1 hour(s) ago
பெங்களூரு: ''கவர்னரை அவமதித்த காங்கிரசை கண்டித்து, இன்று மாநிலம் முழுதும் பா.ஜ., போராட்டம் நடத்தும்,'' என, பா.ஜ., - எம்.எல்.ஏ., சுனில் குமார் தெரிவித்தார்.'மூடா' விவகாரத்தில் முதல்வர் சித்தராமையா மீது வழக்கு தொடர அனுமதி அளித்த கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை கண்டித்து, மாநிலம் முழுதும் காங்கிரசார், அஹிந்தா அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அப்போது கவர்னருக்கு எதிராக ஆட்சேபனைக்குரிய கருத்துகளை தெரிவித்தனர்.இதுதொடர்பாக நேற்று பா.ஜ., - எம்.எல்.ஏ., சுனில் குமார் அளித்த பேட்டி:கவர்னரை அவமதித்த காங்கிரசின் செயலை கண்டித்து, பெங்களூரு உட்பட மாநிலத்தின் அனைத்து மாவட்ட மையங்களிலும் நாளை (இன்று) போராட்டம் நடத்தப்படும்.இதில் கட்சியின் மாநில குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட தலைவர்கள், அலுவலக பணியாளர்கள் உட்பட பா.ஜ.,வினர் கலந்து கொள்கின்றனர்.காங்கிரஸ் போராட்டத்தின்போது, கவர்னரின் உருவப்படம் அவமதிக்கப்பட்டது. சில இடங்களில் உருவப்படம் எரிக்கப்பட்டது. தவிர, அமைச்சர்கள் ஜமீர் அகமது கான், கிருஷ்ணபைரே கவுடா, முன்னாள் எம்.எல்.சி., ஐவான் டிசோசா உட்பட பலர் ஆட்சேபனைக்குரிய கருத்துகள் தெரிவித்தனர்.பெல்தங்கடியில் காங்கிரஸ் தலைவர் ரக் ஷித் சிவராம், பிரதமர் நரேந்திர மோடியை அவதுாறாக பேசி உள்ளார். வன்முறையை துாண்டும் வகையில் கருத்து வெளியிடும் காங்கிரசார் மீது, போலீசார் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
1 hour(s) ago