உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமர் மோடி பெயரில் காங்., - எம்.பி., நம்பிக்கை 

பிரதமர் மோடி பெயரில் காங்., - எம்.பி., நம்பிக்கை 

பெங்களூரு : ''பிரதமர் நரேந்திர மோடி பெயரை பயன்படுத்தாமல், பா.ஜ.,வினரால் ஓட்டு கேட்க முடியுமா?'' என,காங்கிரஸ் எம்.பி., சுரேஷ் கேள்வி எழுப்பி உள்ளார்.பெங்களூரு ரூரல் காங்கிரஸ் எம்.பி., சுரேஷ் அளித்த பேட்டி: கடந்த ஆண்டு மழை பெய்யாமல், விவசாயிகள் கஷ்டப்பட்டனர். மக்களும் வறட்சியால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த ஆண்டு நல்ல மழை பெய்து, விவசாயிகள், மக்கள் முகத்தில் மகிழ்ச்சியை காண வேண்டும். இதற்காக சாமுண்டீஸ்வரி அம்மனிடம் வேண்டி உள்ளேன்.வறட்சி நிவாரண நிதி கேட்டு, முதல்வர் சித்தராமையா, வருவாய் அமைச்சர் கிருஷ்ணபைரேகவுடா, பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினர். ஆனாலும் நிதி ஒதுக்கவில்லை.உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, விசாரணை நடந்த பின்னர், இரண்டு வார அவகாசம் கேட்டு உள்ளனர். வறட்சி நிவாரணம் வழங்கும் விஷயத்தில், பா.ஜ., அரசியல் செய்கிறது. மக்கள் நலனை பற்றி, அவர்களுக்கு எந்த கவலையும் இல்லை.பெங்களூரு ரூரல் தொகுதி பா.ஜ., பொறுப்பாளராக இருந்த, அசோக்கை மாற்றிவிட்டு, அஸ்வத் நாராயணாவை நியமித்து உள்ளார். இதனால் எனக்கு எந்த கவலையும் இல்லை.பிரதமர் மோடி பெயரை பயன்படுத்தாமல், பா.ஜ.,வினரால் ஓட்டு கேட்க முடியுமா? ராம்நகருக்கும், எனக்கும் இருப்பது தாய் - மகன் உறவு என, குமாரசாமி கூறி உள்ளார். அரசியல் ஆதாயத்திற்காக மாற்றி, மாற்றி பேசும் குணம் கொண்டவர் அவர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்