உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்., ஓட்டு சதவீதம் உயர்வு பா.ஜ., - ம.ஜ.த.,வுக்கு குறைவு

காங்., ஓட்டு சதவீதம் உயர்வு பா.ஜ., - ம.ஜ.த.,வுக்கு குறைவு

பெங்களூரு, : முந்தைய லோக்சபா தேர்தலை ஒப்பிடுகையில், காங்கிரஸ் 13.32 சதவீதம் கூடுதல் ஓட்டுகள் பெற்றுள்ளது. பா.ஜ., - ம.ஜ.த., ஓட்டு சதவீதம் குறைந்துள்ளது.கர்நாடகாவில் மொத்தம் 5,47,25,675 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 3,86,57,654 வாக்காளர்கள் ஓட்டு போட்டனர். இது, 70.63 சதவீதம் ஆகும்.இம்முறை, பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி அமைத்து போட்டியிட்டன. 25 தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ., 17லும்; 3 தொகுதியில் போட்டியிட்ட ம.ஜ.த., 2லும்; 28 தொகுதியில் போட்டியிட்ட காங்., 9லும் வெற்றி பெற்றன.இதன்படி, பா.ஜ.,வுக்கு, 17,797,699 ஓட்டுகளும்; காங்கிரசுக்கு, 17,554,381 ஓட்டுகளும்; ம.ஜ.த.,வுக்கு, 21,63,203 ஓட்டுகளும்; பகுஜன் சமாஜுக்கு, 1,27,443 ஓட்டுகளும்; மார்க்சிஸ்ட் கம்யூ.,க்கு 4,546 ஓட்டுகளும்; மற்ற வேட்பாளர்களுக்கு, 7,78,941 ஓட்டுகளும்; நோட்டாவுக்கு, 2,17,456 ஓட்டுகளும்; பதிவாகி உள்ளன.இதே கடந்த 2019ல் நடந்த லோக்சபா தேர்தலில், காங்., - ம.ஜ.த., கூட்டணி அமைத்தும், பா.ஜ., தனித்தும் போட்டியிட்டன. காங்., - 21 தொகுகளில் போட்டியிட்டு 1லும்; ம.ஜ.த., 7 தொகுதியில் போட்டியிட்டு 1லும்; பா.ஜ., 27 தொகுதியில் போட்டியிட்டு 25லும், ஒரு தொகுதியில் சுயேச்சை வேட்பாளரும் வெற்றி பெற்றார்.அப்போது, பா.ஜ.,வுக்கு, 1,80,53,454 ஓட்டுகளும்; காங்கிரசுக்கு, 1,12,03,016 ஓட்டுகளும்; ம.ஜ.த.,வுக்கு 33,97,229 ஓட்டுகளும்; பகுஜன் சமாஜுக்கு, 4,12,382 ஓட்டுகளும்; மற்ற வேட்பாளர்களுக்கு, 13,69,087 ஓட்டுகளும்; நோட்டாவுக்கு, 2,50,810 ஓட்டுகளும் பதிவாகின.அதாவது, 2019 தேர்தலை ஒப்பிடுகையில், 2024ல் பெரிய அளவில் ஓட்டுகள் சிதறி உள்ளன. அப்போது, 51.75 சதவீதம் ஓட்டுகள் பெற்றிருந்த பா.ஜ., 5.69 சதவீதம் குறைந்து, 46.06 ஓட்டுகளும்; 32.11 சதவீதம் ஓட்டுகள் பெற்றிருந்த காங்கிரஸ், 13.32 சதவீதம் கூடுதலாகி, 45.43 சதவீதம் ஓட்டுகளும்; 9.74 சதவீதம் ஓட்டுகள் பெற்றிருந்த ம.ஜ.த., 4.14 சதவீதம் குறைந்து, 5.60 சதவீதம் ஓட்டுகள் பெற்றுள்ளன.வெற்றி பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கையில், காங்கிரஸ் குறைந்தாலும், ஓட்டுகள் எண்ணிக்கையில் பெரிய அளவில் லாபத்தை கண்டுள்ளது என்றே சொல்லலாம்....பாக்ஸ்...வரைபடம் உண்டுகட்சிகள் பெற்ற ஓட்டு சதவீதம்பா.ஜ., 46.06%காங்., 45.43%ம.ஜ.த., 5.60%பி.எஸ்.பி., 0.33%சி.பி.எம்., 0.01%மற்றவை 2.02%நோட்டா 0.56%


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Neutrallite
ஜூன் 06, 2024 09:52

box, வரைபடம் உண்டு என்றெல்லாம் மக்கள் படிக்கும் வகையில் இந்த செய்தி வந்துள்ளது. என்ன ஆயிற்று?


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை