உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்கிரஸ் பிரமுகர் மனைவிக்கு பாக்., உளவு அமைப்புடன் தொடர்பு?

காங்கிரஸ் பிரமுகர் மனைவிக்கு பாக்., உளவு அமைப்புடன் தொடர்பு?

புதுடில்லி: காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சி துணைத் தலைவர் கவுரவ் கோகோய் மனைவி எலிசபெத்துக்கு, பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., உடன் தொடர்பு இருப்பதாக பா.ஜ., குற்றஞ்சாட்டி உள்ளது. காங்கிரஸ் எம்.பி., ராகுல், லோக்சபா எதிர்க்கட்சி தலைவராக உள்ளார். எதிர்க்கட்சி துணைத் தலைவராக அசாமின் ஜோர்ஹாட் தொகுதியில் தேர்வான காங்., - எம்.பி., கவுரவ் கோகோய் பதவி வகிக்கிறார். இவர், ஐரோப்பிய நாடான பிரிட்டனில் பிறந்த எலிசபெத் கோல்பர்னை, 2013ல் திருமணம் செய்தார்.

சரமாரி கேள்வி

இந்நிலையில், எலிசபெத் தொடர்பாக, காங்., கட்சிக்கும், கவுரவ் கோகோய்க்கும், பா.ஜ., தலைவர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளனர். இது குறித்து பா.ஜ., மூத்த தலைவர் அஜய் அலோக் கூறியதாவது:அசாம் எம்.பி., கவுரவ் கோகோயை திருமணம் செய்வதற்கு முன், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., உடன், எலிசெபத்துக்கு தொடர்பு இருந்தது தெரியுமா? பாகிஸ்தான் திட்ட கமிஷன் தலைவராக இருந்த அலி தாகீர் சேக் உடனும், அவர் பணியாற்றி இருக்கிறார். இந்தியாவின் புகழை சர்வதேச அளவில் சீர் குலைக்கும் ஜார்ஜ் சோரஸின் நண்பரான அமெரிக்க எம்.பி., தாம் உடனும், எலிசபெத்துக்கு நட்பு உண்டு.வெளிநாடுகளுக்கு வளர்ச்சி நிதியாக அமெரிக்கா அளிக்கும் பணத்தை, 'காரிடாஸ்' என்ற அமைப்பின் வாயிலாக பெற்று, இந்தியாவில் மதமாற்றப் பணிகளில் எலிசபெத்தின் அண்ணி ஈடுபடுகிறார். கடந்த 2014ல் முதன் முறையாக எம்.பி.,யானதும் சபாநாயகர் அனுமதியோ, உள்துறை அமைச்சக அனுமதியோ பெறாமல் பாகிஸ்தான் துாதரகத்துக்கு கவுரவ் கோகோய் சென்றது ஏன்?அதைத் தொடர்ந்து, இந்திய கடலோர கடல் பாதுகாப்பில் எத்தனை ரேடார்கள் அமைக்க திட்டம் உள்ளது என லோக்சபாவில் கேள்வி கேட்டது ஏன்?பாகிஸ்தான் துாதரக கட்டளையை ஏற்று அந்த கேள்வியை கேட்டாரா? தேச பாதுகாப்பு தொடர்பான இந்த விஷயத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் ஆகியோர் விளக்கம் தர வேண்டும்.இவ்வாறு கூறினார்.

மறுப்பு

அஜய் அலோக்கின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ள காங்., - எம்.பி., கவுரவ் கோகாய், “என்னையும், என் குடும்பத்தையும் இழிவு படுத்துவதற்கு, அதீத எல்லைக்கு பா.ஜ., சென்றுள்ளது. பா.ஜ., கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை. இது தொடர்பாக, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Anand
பிப் 15, 2025 11:16

மொத்த காங்கிரஸ் கட்சியே அப்படிதான்....


M. PALANIAPPAN
பிப் 15, 2025 11:14

நெருப்பு இல்லாமல் புகையுமா ? எல்லா தேச துரோகிகளும் காங்கிரஸில்தான் இருக்கிறார்கள், தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மோடி ஜி Master Of Developing India MODI ஜெய் ஜெய் பாரதம், ஜெய்ஹிந்


Pandi Muni
பிப் 15, 2025 10:15

காங்கிரஸ் தலைமை தலைகள் எல்லாமே பாகிஸ்தான் உளவாளிகள்தான்


angbu ganesh
பிப் 15, 2025 10:01

இதை கண்டுபுடிக்க இதனை நாளாச்சி ஒருத்தன் பாகிஸ்தானுக்கு கொடி பிடிக்கும் போதாய் தெரியல பப்புவை போய் பக்குன்னு பிடிங்க


Sundar Pas
பிப் 15, 2025 09:55

மொத்த இந்திய துரோகிகளும் காங்கிரஸில்தான் உள்ளனர் என்பது தெரிந்ததுதானே?


N.Purushothaman
பிப் 15, 2025 09:16

ஈத்தரைகளின் கூடாரம் கான் - கிராஸ்.....நாட்டை அந்நியர்களுக்கு அடிமைப்படுத்த உழைக்கும் தீயவர்கள் ...


V வைகுண்டேஸ்வரன்
பிப் 15, 2025 08:39

தமிழ்நாட்டில் இருக்கும் பாஜக வினாருக்குத் தான் தேசபக்தியே துளி கூட கிடையாது. பிறந்த தமிழ் நாட்டை அவமரியாதையாக அவதூறாக "டாஸ்மாக்கிநாடு", "டுமீல்நாடு ", "டுமீலன்" என்றெல்லாம் தொடர்ந்து எழுதுகிறார்கள்.


Shekar
பிப் 15, 2025 09:55

திருட்டு ரயில் கூட்டம் சாராயக்கடை திறந்து, கலாச்சாரத்துடன் வாழ்ந்த தமிழ்நாட்டு மக்களை குடிகாரர்களாக்கி கொலை கொள்ளை கற்பழிப்பு என்று நாசமாகியதால் வேறு எப்படிகூறுவது. டாஸ்மாக்கை மூடட்டும், போலீசை நேர்மையாக செயல்பட அனுமதிக்கட்டும், லஞ்சத்தை ஒழிக்கட்டும், திறமையை மதிக்கட்டும், குடும்ப தலையீட்டை ஒழிக்கட்டும், ஊழல் அமைச்சர்களை சிறைக்கு அனுப்பட்டும் நானே விடியலார் படத்தை பச்சை குத்திக்கொள்கிறேன்.


Shekar
பிப் 15, 2025 09:59

மற்றொன்றை மறந்துவிட்டேன், கொள்ளை அடித்து சம்பாதித்த அனைத்து செல்வங்களும் நாட்டுடைமையாக்கவேண்டும் தன் சுற்றம் உட்பட


Amar Akbar Antony
பிப் 15, 2025 11:39

கோவில்கள் உள்ள நகரம் கோவில்நகரம் அதைபோல் டாஸ்மாக் அதிகமுள்ள தமிழ்நாடு டாஸ்மாக் நாடன்றோ?


RAJ
பிப் 15, 2025 08:21

நாற்றம் பிடித்த ஜென்மங்களே... நாட்டின் நச்ச்சு பாம்புகளே ... காங்கிரஸ் கயவர்களே... இந்திய திருநாட்டைவிட்டு வெளியேறுங்கள்.. .. மோடிஜி பொறுத்தது போதும்... ..சாட்டையை சுழற்றுங்கள்..


Kalyanaraman
பிப் 15, 2025 07:26

நமது சட்டங்களுக்கும் நீதிமன்றங்களுக்கும் ஆண்மையும் முதுகெலும்பும் இருந்திருந்தால் எதிர்க்கட்சித் தலைவரோ/ துணைத் தலைவரோ தேச துரோக செயல்களில் ஈடுபட முடியுமா? கடும் தண்டனையற்ற பல காலம் ஜவ்வாக விசாரணையை இழுத்துக் கொண்டே போக முடியும் என்பதால் தானே இவர்களுக்கு இவ்வளவு தைரியம். நடைமுறையில் குற்றவாளிகளுக்கும் தேச துரோகிகளுக்கும் நமது சட்டங்களே துணையாக இருக்கிறது என்றால் மிகையில்லை. ஜெய்ஹிந்த்.


Kasimani Baskaran
பிப் 15, 2025 07:25

உயர் மொழியில் தத்துவங்கள் பல பேசும் மொழியியல் நிபுணர் சசி கூட பாகிஸ்தானுடன் ரொம்பவே இணக்கமாக இருந்தார். மணிமேகலை கூட குடும்பத்தோடு சீனாவில் ஒப்பந்தம் போட்டு இருக்கிறார். தேசப்பற்று இல்லாத சாக்கடைகள் நிறைந்த கட்சி காங்கிரஸ்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை