உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்கிரசுக்கு பொய் சொல்வது மட்டும் தான் தெரியும்: பிரதமர் மோடி பிரசாரம்

காங்கிரசுக்கு பொய் சொல்வது மட்டும் தான் தெரியும்: பிரதமர் மோடி பிரசாரம்

ராஞ்சி: காங்கிரசுக்கு வளர்ச்சி பற்றி எதுவும் தெரியாது. அவர்களுக்கு பொய் சொல்வது மட்டும் தான் தெரியும் என பிரதமர் மோடி கூறினார்.ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: ஜூன் 4 ஆம் தேதி ஜாம்ஷெட்பூர் தொகுதியில் பா.ஜ., வெற்றி பெறும் என்பதை உங்கள் உற்சாகம் சொல்கிறது. பல ஆண்டுகளாக பா.ஜ., கட்சியின் ஊழியராக பணியாற்றியுள்ளேன். உங்கள் அனைவருக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். லோக்சபா தேர்தல் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது மற்றும் பலப்படுத்துகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=v3geq9z0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

பொய்

காங்கிரசுக்கு வளர்ச்சி பற்றி எதுவும் தெரியாது. அவர்களுக்கு பொய் சொல்வது மட்டும் தான் தெரியும். ஏழைகளின் பணத்தைப் பறிப்பது, எஸ்.சி, எஸ்.டி., ஓ.பி.சி., சமூகத்தின் இடஒதுக்கீட்டைப் பறிக்க காங்கிரஸ் முயற்சி செய்கிறது. இதைத் தாண்டி அவர்களால் எதையும் சிந்திக்க முடியாதா?.

50 முறை

இண்டியா கூட்டணியினர் மக்களிடம் பொய் சொல்கிறார்கள். அவர்களின் யார் என்று முழு நாட்டிற்கும் தெரியும். கட்சி ஆளும் மாநிலங்களில் முதலீடு செய்வதற்கு முன்பு, எந்த ஒரு தொழிலதிபரும் 50 முறை யோசிப்பார்கள். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

பணமூட்டைகள்

மேற்கு வங்க மாநிலம் புருலியாவில் நடந்த தேர்தல் பேரணியில், பிரதமர் மோடி பேசியதாவது: திரிணமுல் காங்கிரசும், காங்கிரஸ் கட்சியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். காங்கிரஸ் தலைவர்களின் வீடுகளில் ஏராளமான பணம் சிக்கியுள்ளது. காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ் தலைவர்களிடம் பண மூட்டைகள் உள்ளன. ஆனால் நான் உங்களிடமிருந்து எதையாவது மறைத்திருக்கிறேனா?. சந்தேஷ்காலி சம்பவம் மேற்குவங்க பெண்களை உலுக்கியது. திரிணமுல் காங்கிரஸ் மீது மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டனர். மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க இண்டியா கூட்டணியினர் விரும்புகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Ramesh Sargam
மே 19, 2024 22:11

அதைவிட ஊழல் அதிகம் செய்யவும் தெரியும்


சுபாஷ்
மே 19, 2024 18:43

சாதனையா சொல்கிக்கிறதுக்கு ஒண்ணுமில்லை. அவிங்களைத் திட்டி பொழப்பு நடத்த ஆரம்பிச்சாச்சு.


Rajinikanth
மே 19, 2024 17:48

தொப்பி சூப்பர்


A1Suresh
மே 19, 2024 17:11

பொய் சொல்வது மட்டுமல்ல ஊழல் செய்வது மட்டுமல்ல மாறாக தேசதுரோக செயல்கள், பயங்கரவாத செயல்களையும் செய்யும்


Palanisamy Sekar
மே 19, 2024 15:17

காங்கிரசுக்கு பொய் மட்டுமல்ல, ஊழலிலும் உச்சம் தொட்டவர்கள் தான் ஊழலில் இந்தியாவையே நாறடித்தார்கள் தொடுகின்ற அனைத்திலும் பணத்தை கொள்ளையடித்தார்கள் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரவே வரமுடியாது மக்களின் மனதில் அவர்களின் ஒவ்வோர் அட்டூழியங்களும் பச் என்று பதிந்துவிட்டது அதனை மறக்கவே முடியாது என்பதால் காங்கிரஸ் இண்டி கூட்டணி பெயரில் ஒளிந்துகொண்டு வருகின்றது எந்த உருவத்தில் வந்தாலும் சரி காங்கிரசுக்கு இந்தியாவில் இனி இடமே கிடையாது


Kasimani Baskaran
மே 19, 2024 14:13

காங்கிரசின் சாதனை என்று சொன்னால் முப்பது லட்சம் இந்தியர்களை பிரிவினையில் பொழுது கொன்றதுதான் சுதந்திரத்துக்கு முன்னரே வங்காளத்தின் விளைச்சலை மொத்தமாக பிரிட்டனுக்கு அனுப்பி போர்க்காலத்தில் பெரும் பசி பட்டினி மூலம் முப்பத்தைந்து லட்சம் இந்தியர்களை பிரிட்டிஷாருடன் சேர்ந்து கொன்றார்கள் அதாவது ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே பிரிடீஷாருடன் பயிற்சி எடுத்து கிட்டத்தட்ட அறுபது லட்சம் உயிர்களை காவு வாங்கினார்கள் கேட்டால் சிலர் கலவரத்தில் மாண்டதாக பொய் சொல்கிறார்கள்


மேலும் செய்திகள்













புதிய வீடியோ