உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லோக்சபாவில் எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்து காங்., முடிவு செய்யும்: சரத் பவார் பேட்டி

லோக்சபாவில் எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்து காங்., முடிவு செய்யும்: சரத் பவார் பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: லோக்சபாவில் எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்து காங்., முடிவு செய்யும் என மஹா., முன்னாள் முதல்வர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.இது குறித்து மஹா., முன்னாள் முதல்வர் சரத் பவார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: முன்னதாகவே அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெறுவது தொடர்பாக ஒப்புக்கொண்டோம். அதனால் காங்கிரஸ் கட்சி அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அந்த கட்சி முடிவு செய்யும்' என்றார்.

துணை சபாநாயகர்

எதிர்க்கட்சிகள் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால், துணை சபாநாயகர் பதவியை கேட்டு வலியுறுத்துவோம் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. துணை சபாநாயகர் பதவி கேட்டு வலியுறுத்துவீர்களா? என்ற கேள்விக்கு, இந்த விதிமுறை கடந்த மோடி அரசால் கடைபிடிக்கப்படவில்லை. இது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும். ஆனால், நல்ல பதில் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை என சரத்பவார் பதில் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

NCP
ஜூன் 20, 2024 20:50

நீங்க சபாநாயகர் உங்க பொண்ணு துணை சபாநாயகர்


பேசும் தமிழன்
ஜூன் 20, 2024 18:37

நீங்கள் ஆட்சியில் இருந்த போது... நீங்கள் இப்போது கூறும் அந்த நடைமுறைகளை செயல்படுத்தி இருக்கீங்களா ??


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை