உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்கிரஸ் கட்சியை மக்கள் நிராகரித்துவிட்டனர்: மத்திய அமைச்சர்

காங்கிரஸ் கட்சியை மக்கள் நிராகரித்துவிட்டனர்: மத்திய அமைச்சர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெய்ப்பூர்: 'அரசியலமைப்பு சட்டத்தை கொலை செய்தது காங்கிரஸ் தான். அக்கட்சியை மக்கள் நிராகரித்துவிட்டனர்' என மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறினார்.இது குறித்து, நிருபர்களிடம் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறியதாவது: அரசியலமைப்பு சட்டத்தை கொலை செய்தது காங்கிரஸ் தான். 1975ம் ஆண்டு எமர்ஜென்சியை அமல்படுத்தி அரசியலமைப்பு சட்டத்தை காங்கிரஸ் நசுக்கியது. தற்போது அவர்கள் இன்று அரசியலமைப்பு சட்டம் புத்தகத்தை கையில் பிடித்துக்கொண்டு, காப்பாற்றுங்கள் என்று கோஷம் போடுகிறார்கள்.காங்கிரஸ் கட்சி தனது பொய்களை, 100 முறை சொல்லி உண்மையென நிரூபிக்க முயல்கிறது. ஆனால் நாட்டு மக்களால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. காங்கிரஸ் கட்சியை மக்கள் நிராகரித்துவிட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

K.Ramakrishnan
ஜூலை 14, 2024 17:20

காங்கிரசை நிராகரித்து விட்டனர் என்றால் இடைத் தேர்தல்களில் 13 தொகுதிகளை பத்து இடங்களை காங்கிரஸ் உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சிகள் கைப்பற்றியது அமைச்சரே?


ஆரூர் ரங்
ஜூலை 14, 2024 14:28

எல்லா INDI கூட்டணிக் கட்சிகளும் சேர்ந்து கூட BJP அளவுக்கு MP கிடையாது. அதுதான் மக்கள் தீர்ப்பு. காரணமே இல்லாமல் ஏராளமான எதிர்கட்சி ஆண்ட மாநில அரசுகளைக் கலைத்த காங், 90க்கும் மேற்பட்ட முறை அரசியல் சட்டத்தைத் திருத்தி வளைத்த காங்கிரஸ் அரசியல் சட்டம் பற்றிப் பேச லாயக்கில்லை.


vadivelu
ஜூலை 14, 2024 13:36

ஏன் என்றால் ரூ8500 மாதாமாதம் என்று பொய் சொன்னதால்.இனி மக்கள் ஏமாறுவார்களா என்பது சந்தேகம்.


naranam
ஜூலை 14, 2024 13:07

அப்படி ஒன்னும் தெரியலையே? நாவடக்கதோடு பாஜ வின் வெற்றியின் அளவு ஏன் குறைந்த வருகிறது என்று சிந்திக்கவும்.


வைகுண்டேஸ்வரன்
ஜூலை 14, 2024 12:46

அவ்ளோ அறிவு. இப்படி அவங்க கையில் லோக்கல் மீட்டிங் ல இருந்து பார்லிமென்ட் வரை பிஜேபி யை காச்சி எடுக்கறாங்க


தஞ்சை மன்னர்
ஜூலை 14, 2024 12:32

யாரவது இந்த அமைச்சரை எழுப்பிவிடுங்கப்பா நாக்பூர் குருப் இன்னும் தூங்கி கொண்டு இருக்கு 13 இடைத்தேர்தலில் கான்கிராஸ் ஜெயித்து இருக்கு என்பதை கூட ஜீரணிக்க முடியவில்லை


A Viswanathan
ஜூலை 14, 2024 13:30

இப்படி பேசியே பொழுதை போக்காமல் அடுத்து வரும் தேர்தலில் வெற்றி பெறபாடுபடுங்கள். இல்லை என்றால் உங்கள் கடசியும் காங்கிரஸ் போல் ஆகிவிடும்


Gopal,Sendurai
ஜூலை 14, 2024 13:40

மூர்க்கன்கள் எல்லாம் மன்னராக வலம் வரும் காலமிது ஆங் மன்னரே உங்களுக்கு செங்கோல் பற்றி ஏதாவது தெரியுமா?


p.s.mahadevan
ஜூலை 14, 2024 14:01

unmai


abdulrahim
ஜூலை 14, 2024 14:13

மூர்க்கங்களை சொல்கிற போல....


ஆரூர் ரங்
ஜூலை 14, 2024 14:23

கை சின்னத்திலேயே வென்றது 13 ஆ? கதை விடாதே


தஞ்சை மன்னர்
ஜூலை 18, 2024 11:11

ஏ பி சே பி ஜெயித்தது எல்லாம் அதனுடைய சின்னத்தில்


மேலும் செய்திகள்



புதிய வீடியோ