உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மக்களை பயமுறுத்த காங்கிரஸ் முயற்சி: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

மக்களை பயமுறுத்த காங்கிரஸ் முயற்சி: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

புவனேஸ்வர்: 'பாகிஸ்தானிடம் அணுகுண்டுகள் இருப்பதாகச் சொல்லி எச்சரிக்கையுடன் நடக்கச் சொல்கிறார்கள். காங்கிரஸ் எப்போதும் மக்களை பயமுறுத்த முயற்சிக்கிறது' என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.ஒடிசா மாநிலம் கந்தமாள் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: அணுகுண்டு சோதனை உலகெங்கும் உள்ள இந்தியர்களை பெருமையில் ஆழ்த்தியது. நான் ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவன். அதனால் ஏழை மக்களின் வாழ்க்கை நிலைமையை உயர்த்துவதற்காக நான் அயராது உழைக்கிறேன். 25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீள நான் உதவியுள்ளேன். ஏழைகள் அனைவரும் முன்னேறும் வரை நான் நிம்மதியாக இருக்க மாட்டேன். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zbfgqf0e&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

அணுகுண்டுகள்

ஒடிசாவில் என்னென்ன பணிகள் நடக்கின்றன என்று டில்லியில் தினமும் கண்காணிக்கப்படுகிறது. பாகிஸ்தானிடம் அணுகுண்டுகள் இருப்பதாகச் சொல்லி எச்சரிக்கையுடன் நடக்கச் சொல்கிறார்கள். காங்கிரஸ் எப்போதும் மக்களை பயமுறுத்த முயற்சிக்கிறது. இந்தியர்களின் மனதில் அச்சத்தை உருவாக்குகிறார்கள். எப்போதும் இதை தான் காங்கிரஸ் செய்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சியில் ஜம்மு காஷ்மீர் மக்கள் 60 ஆண்டுகளாக பயங்கரவாதத்தை எதிர்கொண்டனர்.

400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி

காங்கிரசார் பயங்கரவாதிகளுடன் சந்திப்பு நடத்தியதை தேசம் ஒருபோதும் மறக்காது. லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். ஜூன் 4ம் தேதி நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என மக்கள் முடிவு செய்துவிட்டனர். ஒடிசாவை வளர்ந்த மாநிலமாக மாற்ற அனைத்தையும் செய்வேன். ஒடிசாவில் முதல்முறையாக பா.ஜ., ஆட்சி அமையும். நவீன் பட்நாயக் நீண்ட காலமாக முதல்வராக இருந்ததால் அவருக்கு சவால் விட விரும்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

ஆரூர் ரங்
மே 11, 2024 16:43

பாகிஸ்தான் நடத்திய மும்பைத் தாக்குதலுக்கு பதிலடியே கொடுக்காத காங்கிரஸ் திமுக கூட்டணிக்கு பாக் நண்பர்கள் மூர்க்கமாக முட்டுக் கொடுக்கிறார்களோ?


Syed ghouse basha
மே 11, 2024 15:14

அய்யோ பாவம் நல்ல வைத்தியரிடம் உடனே காட்டுங்கள்


குமரி குருவி
மே 11, 2024 13:58

நாட்டை நாசபடுத்த தொடை நடுங்கி காங்கிரஸ் முயற்சிக்கிறது


MADHAVAN
மே 11, 2024 13:54

பாகிஸ்தான், முஸ்லீம், மதம், பாலக்கோடு பாதுகாப்பு, பெரிய நெஞ்சு, இப்படி மக்களை பயமுறுத்துவது நீங்கள்தான் மோடி ஜி


MADHAVAN
மே 11, 2024 13:36

பாகிஸ்தான் பாகிஸ்தானு பயமுறுத்துவது நீங்கள்தான்


K.n. Dhasarathan
மே 11, 2024 13:09

பாவம் பிரதமர், என்ன பேசுவது என்று புரியாமல் எதோ எதோ பேசுகிறார், அப்புறம் ஏழைத்தாயின் மகன் என்றும் சொல்கிறார், அப்புறம் ஏன் கோடி மதிப்பில் இவருக்கு தனி விமானம், எந்த பிரதமரும் இப்படி இல்லை, அப்புறம் வெளி நாட்டு கார், கோடிகளில் உடை , தனி மேக்ப்பு ஆள், இதில் மக்கள் நலன் பற்றியே எந்நேரமும் சிந்திக்கிறாராம், அப்புறம் இனொன்று காஸ்மீர் என்னவோ அமைதி பூங்கா ஆயிற்றாம் ? அப்படியா ? அங்கு தினமும் சண்டை நடக்கிறது, அது ஏன் ? மணிப்பூரிலும் அப்படித்தான், உண்மையை பேசுங்கள்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை