உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்., பெண் கவுன்சிலருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

காங்., பெண் கவுன்சிலருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

சிக்கமகளூரு,: சட்டவிரோதமாக மூன்று வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுத்த, காங்கிரஸ் பெண் கவுன்சிலரிடம் இருந்து, அபராதமாக, 1 லட்சம் ரூபாயை மெஸ்காம் அதிகாரிகள் வசூலித்துள்ளனர்.சிக்கமகளூரின் என்.ஆர்., புரா தாலுகா தேவ்தானா கிராம பஞ்சாயத்து கவுன்சிலர் ஆஷா நாராயண், 51. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். என்.ஆர்., புரா காங்கிரஸ் மகளிர் அணி தலைவியாகவும் உள்ளார்.இவருக்குச் சொந்தமான மூன்று வீடுகள், என்.ஆர்., புரா அருகே கடபகெரே கிராமத்தில் உள்ளன. இந்த மூன்று வீடுகளுக்கும் மின்கம்பத்தில் இருந்து சட்டவிரோதமாக மின்இணைப்பு கொடுத்து இருப்பதாக, மெஸ்காம் அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.நேற்று காலை மங்களூரில் இருந்து வந்த மெஸ்காம் அதிகாரிகள், ஆஷா நாராயண் வீடுகளுக்கு கொடுக்கப்பட்ட, மின் இணைப்புகளை சரிபார்த்தபோது, சட்டவிரோதமாக கொடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.பின், ஆஷா நாராயணிடம் இருந்து 1 லட்சம் ரூபாயை, அபராதமாக வசூலித்தனர். கவுன்சிலரே வீட்டிற்கு சட்டவிரோத மின் இணைப்பு கொடுத்தது, தற்போது பேசுபொருளாக மாறி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை