உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தொகுதி மக்கள் வருந்துவர் காங்., - எம்.எல்.ஏ., சாபம்

தொகுதி மக்கள் வருந்துவர் காங்., - எம்.எல்.ஏ., சாபம்

ராம்நகர்: ''லோக்சபா தேர்தலில் சுரேஷின் தோல்வி, தொகுதி மக்களுக்கு தான் இழப்பு. அவரை நிராகரித்ததற்காக, ஒரு நாள் வருத்தப்படுவர்,'' என காங்கிரஸ் எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணா தெரிவித்தார்.ராம்நகர் மாவட்டம், பன்னிகுப்பே கிராமத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், மாகடி காங்கிரஸ் எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணா பேசியதாவது:சுரேஷ் எம்.பி.,யாக இருந்த போது, மாகடி தொகுதிக்கு 150 கோடி ரூபாய் ஒதுக்கினார். தற்போது ஒவ்வொரு கிராமத்திலும், 50 லட்சம் ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய் வரை வளர்ச்சி பணிகள் நடந்து வருகின்றன.எங்களின் வேகத்துக்கு, லோக்சபா தேர்தலில் மக்கள் 'பிரேக்' போட்டுள்ளனர். இதனால் ஏற்படும் நஷ்டம் குறித்தும், அவரை நிராகரித்ததற்காகவும் ஒரு நாள் மக்கள் வருத்தப்படுவர். கர்நாடகாவில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.இம்முறை அவருக்கு வாய்ப்பு கொடுத்திருந்தால், இன்னும் ஏராளமான வளர்ச்சி பணிகள் நடந்திருக்கும். எதிர்க்கட்சிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளதால், பணிகள் ஆமை வேகத்தில் நடக்கும்.நாம் உணர்ச்சிவசப்பட்டு பேசவும், பொய் சொல்லவும் கற்றுக் கொள்ளாததே, நம்மிடம் இருக்கும் பெரிய பின்னடைவும், பிரச்னையும் தான். அவரை (குமாரசாமி) போன்று நாமும் பொய் சொல்லி, உணர்ச்சி வசப்பட்டு பேச வேண்டாம்.முந்தைய எம்.பி.,க்கள் போன்று, தற்போதைய எம்.பி.,க்களும் செயல்படுவர் என்று நம்புகிறோம். உணர்ச்சிவசப்பட்டு பேசுவதை விட்டுவிட்டு கிராமங்களுக்கு செல்ல வேண்டும். இம்மாவட்டத்துக்கு சிறப்பு மானியத்தை, மத்திய அரசு வெளியிடட்டும். வளர்ச்சி பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம்.மத்திய கனரக தொழில் துறை அமைச்சராக உள்ள குமாரசாமியால், ராம்நகர் மாவட்டத்தில் வேலை வாய்ப்பு இல்லாமல் உள்ள 5,000 பேருக்கு வலை வாய்ப்பு வழங்க முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி