உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சர்ச்சை பெண் ஐ.ஏ.எஸ்., விவகாரத்தில் ஒரு நபர் குழு விசாரணை

சர்ச்சை பெண் ஐ.ஏ.எஸ்., விவகாரத்தில் ஒரு நபர் குழு விசாரணை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை : பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி விவகாரம் தொடர்பாக மத்திய அரசு ஒரு நபர் குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.மஹாராஷ்டிராவைச் சேர்ந்த பூஜா கேத்கர். இவர், 2023 யு.பி.எஸ்.சி., தேர்வில் அகில இந்திய அளவில் 821-வது இடத்தைப் பெற்றார். பயிற்சி ஐ.ஏ.எஸ்., அதிகாரியான இவர், புனேவில் உதவி கலெக்டராக நியமிக்கப்பட்டார்.தன் காரில் சிவப்பு, நீல சுழல் விளக்கு பயன்படுத்தியது, கலெக்டர் அறையை பயன்படுத்தி ஆக்கிரமித்தது, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சலுகையை தவறாக பயன்படுத்திய போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் இவர் மீது எழுந்தது. இதையடுத்து அவர் இடமாற்றம் செய்யப்பட்டார்.இந்நிலையில் மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், பூஜா கேத்ர் குறித்து ஒரு நபர் குழு அமைத்து இரு வாரங்களில் அறிக்கை தர மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித்துறை உத்தரவிடபட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

naranam
ஜூலை 12, 2024 14:43

இந்த ஒரு நபர் குழு என்பது கண் துடைப்பு வேலை போல உள்ளதே! ஒரு நபர் எப்படி குழு ஆவார்?


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூலை 12, 2024 10:57

இந்த மனப்பான்மை இப்போது சர்வ சாதாரணமாக அனைத்து படித்தவர்களிடையே காணப்படுகிறது.


Sck
ஜூலை 12, 2024 06:03

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் ஒவ்வொரு அரசு நடவடிக்கையில் பெரிய அளவு ஓட்டைகள் இருக்கிறது. இது ஆண்டாடு காலமாக இருந்திருக்க வேண்டும்.


Kasimani Baskaran
ஜூலை 12, 2024 05:33

எடுத்தவுடன் நேரடியாக மாவட்ட ஆட்சியராக பதவி நியமணம் பெற்றதாக நினைத்துவிட்டார் போல இருக்கிறது.


Natarajan Ramanathan
ஜூலை 11, 2024 23:32

இவரது IAS தேர்வை ரத்து செய்துவிடவேண்டும்.


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ