உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விபத்து லாரியை கண்டுபிடிக்க போலீசாருக்கு உதவிய பசு

விபத்து லாரியை கண்டுபிடிக்க போலீசாருக்கு உதவிய பசு

காமாட்சிபாளையா:விபத்தை ஏற்படுத்தி, ஒருவரின் இறப்புக்கு காரணமான லாரியை கண்டுபிடிக்க, பசுவின் ஓவியம் போலீசாருக்கு உதவியது.பெங்களூரின் மாளகாலா சுரங்கப்பாதை அருகில், மேம்பாலத்தின் மீது நடப்பாண்டு ஜனவரி 13ல், ஒரு பைக் சென்றது. அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில், பின் இருக்கையில் அமர்ந்திருந்த தினேஷ் பட் காயம் அடைந்து உயிரிழந்தார். பைக் ஓட்டிய டீகராஜ் காயம் அடைந்தார்.இது குறித்து, காமாட்சிபாளையா போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை கண்டுபிடிக்க முயற்சித்தனர். சம்பவ இடம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். விபத்தை ஏற்படுத்தியது லாரி என்பதை கண்டுபிடித்தனர்.லாரியின் முன் பகுதியில், பசுவின் தலை கொண்ட, 'லோகோ' இருப்பது தெரிந்தது. இதை வைத்து லாரியை தேடிய போது, மாண்டியாவின் துாபனகெரேவில் இருப்பதை கண்டுபிடித்தனர். அங்கு சென்று விசாரித்த போது, லாரி நீண்ட நாட்களாக ஒரே இடத்தில் நின்றிருப்பதாக, அப்பகுதியினர் கூறினர்.லாரி சக்கரத்தில் தசை துணுக்கு, ரத்த கறைகள் தென்பட்டன. இதன் மாதிரியை, தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பினர். சக்கரத்தில் கிடைத்த தசை துணுக்கும், ரத்தமும் தினேஷ் பட்டுடையது என்பது உறுதியானது. அதன்பின் லாரி ஓட்டுனர் சுனிலை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ