உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 6 வயது மகனை ஆற்றில் தள்ளி கொன்ற கொடூர தாய் கைது

6 வயது மகனை ஆற்றில் தள்ளி கொன்ற கொடூர தாய் கைது

உத்தரகன்னடா : தம்பதியிடையே ஏற்பட்ட வாக்குவாதம், 6 வயது மகனின் கொலையில் முடிந்தது. பெற்றோர் கைது செய்யப்பட்டனர்.உத்தரகன்னடா, தான்டேலியின் ஹாலமட்டி கிராமத்தில் வசிப்பவர் ரவிகுமார் ஷெல்லே, 34. இவரது மனைவி சாவித்திரி, 28. இத்தம்பதிக்கு வினோத், 6, என்ற மகன் இருந்தார். தம்பதி இடையே தினமும் சண்டை நடக்கும். மகனுக்கு பேச்சு வரவில்லை. இதை காரணம் காண்பித்து, மனைவியை ரவிகுமார் துன்புறுத்தி வந்தார். பேச்சு வராத மகனிடம், 'செத்து தொலை' என, திட்டுவார். மனைவியை சாப்பிடவும் விடுவதில்லை. நேற்று முன்தினம் இரவும், தம்பதி சண்டை போட்டனர். கடுமையான வாக்குவாதம் நடந்தது. பொறுமை இழந்த சாவித்திரி, மகனை அழைத்து கொண்டு வீட்டில் இருந்து வெளியேறினார்.கிராமத்தின் அருகில், முதலைகள் காணப்படும் காளி ஆற்றில் மகனை தள்ளினார். இதை பார்த்த அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக அங்கு வந்த தான்டேலி ஊரக போலீசார், தீயணைப்பு படையினர் கால்வாயில் சிறுவனை தேடும் பணியை துவக்கினர்.இரவு என்பதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. நேற்று அதிகாலை பணிகளை துவக்கினர். முதலை ஒன்று சிறுவனின் உடலை வாயில் கவ்வியபடி ஆற்றில் செல்வதை பார்த்தனர். நீச்சல் வீரர்கள், தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி, முதலை வாயில் இருந்து சிறுவன் உடலை மீட்டனர்.இச்சம்பவம், கிராமத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மகனை ஆற்றில் வீசி கொலை செய்த தாயையும், இதற்கு காரணமான தந்தை ரவிகுமாரையும் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ