உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இளைஞர்களின் விருப்பங்களை நிறைவேற்ற முடிவு: பிரதமர் மோடி

இளைஞர்களின் விருப்பங்களை நிறைவேற்ற முடிவு: பிரதமர் மோடி

புதுடில்லி: 'ஆந்திர மாநில இளைஞர்களின் விருப்பங்களை நிறைவேற்ற அரசு முழுமையாக உறுதிபூண்டுள்ளது' என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.ஆந்திர மாநில முதல்வர் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்த புகைப்படங்களை எக்ஸ் சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார்.

வாக்குறுதி

ஆந்திர மாநிலத்தின் புகழை புதிய உயரங்களுக்கு கொண்டு செல்லவும், மாநில இளைஞர்களின் விருப்பங்களை நிறைவேற்றவும் அரசு முழுமையாக உறுதிபூண்டுள்ளது என பிரதமர் மோடி வாக்குறுதி அளித்துள்ளார்.

வாழ்த்து

ஆந்திர மாநில முதல்வராக பதவியேற்ற சந்திரபாபு நாயுடு மற்றும் அமைச்சராக பொறுப்பேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை வாழ்த்து

இது குறித்து அண்ணாமலை எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆந்திர மாநில முதல்வராக 4வது முறையாக பதவியேற்றுள்ள சந்திரபாபு நாயுடுவுக்கு வாழ்த்துக்கள். தே.ஜ., கூட்டணி அரசு ஆந்திரா மாநிலத்தை வளர்ச்சி மற்றும் செழிப்புப் பாதையில் கொண்டு செல்லும் என்று நாங்கள் நம்புகிறோம். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

RAMAKRISHNAN NATESAN
ஜூன் 12, 2024 23:46

திராவிட மாடல் இளைஞர்களுக்கு கிடைத்து வந்த அதாங்க அயலக அணி தலைவர் கொடுத்த திராவிட மருந்தையும் இல்லாம ஆக்கிட்டு பேச்சைப்பாரு .....


ES
ஜூன் 12, 2024 22:14

What were you doing sir for ten years then?


Mario
ஜூன் 12, 2024 18:42

2 கோடி வேலை


Sivakumar
ஜூன் 12, 2024 18:39

இதுநாள்வரை பெரும் கார்பரேட்களின் விருப்பங்களை நிறைவேற்றிய இந்த முடிவு வரவேற்கத்தக்கது


தஞ்சை மன்னர்
ஜூன் 12, 2024 18:15

இவ்வளவு நாளா யாரோட விருப்பத்தை நிறைவேற்றி கொண்டு இருந்தார்கள்


Rengaraj
ஜூன் 12, 2024 15:55

தகவல் தொழில் நுட்பத்தில் ஏற்கெனெவே தமிழகம், கர்நாடகம், ஆந்திரா மற்றும் கேரள மாநிலங்கள் வளர்ச்சியடைந்து வருகின்றன. இனி வரும் காலத்தில் ஆந்திரா மென்மேலும் வளர்ச்சி பெற்று நாட்டில் முக்கிய பங்காற்றும் என்றே சொல்லலாம். சந்திரபாபுநாயுடு கடுமையான உழைப்பாளி. மத்தியில் கூட்டாட்சியில் பங்குகொண்டுள்ளார். மாநிலத்தின் வளர்ச்சிக்காக அதிகமாக பாடுபடுவார். தமிழகத்தை விட அந்தமாநிலத்தில் இதற்கான உள்கட்டமைப்பு சமீபகாலமாக மேம்பட்டு சிறந்ததாக உள்ளது. நம் மாநிலத்தில் உள்கட்டமைப்பு ஆந்திராவை விட பிரமாதம் என்று சொல்லிவிடமுடியாது.


மேலும் செய்திகள்







புதிய வீடியோ