உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டீப் பேக் வீடியோக்கள்: கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் அறிவுறுத்தல்

டீப் பேக் வீடியோக்கள்: கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் அறிவுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சமூக வலைதளங்களில் டீப் பேக் வீடியோக்கள் தேர்தல் கமிஷனின் கவனத்திற்கு வந்த மூன்று மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும் என அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ளது.ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ள லோக்சபாவிற்கு முதல் இரண்டு கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளன.இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா , காங். எம்.பி.,ராகுல் , பாலிவுட் நடிகர்கள் ஆமீர்கான், ரன்பீர் கபூர் உள்ளிட்டோரின் டீப் பேக் வீடியோக்கள் மூலம் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவது தேர்தல் கமிஷனின் கவனத்திற்கு வந்துள்ளது. இதையடுத்து தேர்தல் கமிஷன் கூறியது, சமூக வலைதளங்களில் கணக்கு வைத்துள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்திற்காக டீப் பேக் வீடியோக்களை பதவேற்றுகின்றனர். இது தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறிய செயல். எனவே டீப் பேக் வீடியோக்கள், அது தொடர்பான தொகுப்புகள் தேர்தல் கமிஷனின் கவனத்திற்கு வந்தால், அதனை மூன்று மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும். மீறினால் நடவடிக்கை பாயும். இவ்வாறு அதில் தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Kasimani Baskaran
மே 07, 2024 06:45

வேலையில்லை என்றால் ஏதாவது குப்பைகளை உருவாக்கி அதை வெளியிட்டு அதில் இன்பம் காண்பதில் காங்கிரஸ்காரர்கள் சூப்பராக வேலை செய்வார்கள் திரும்பவும் காங்கிரஸ் மமோசிங் என்கிற வகையில் கார்கேயை டம்மியாக வைத்து ஐரோப்பிய ஆட்சியை அமைத்து விடலாம் என்று எண்ணுகிறது


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை