உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஓம் பிர்லா மகள் குறித்து அவதூறு: பதிவுகளை நீக்க கூகுள், எக்ஸ்-க்கு உத்தரவு

ஓம் பிர்லா மகள் குறித்து அவதூறு: பதிவுகளை நீக்க கூகுள், எக்ஸ்-க்கு உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவின் மகளான அஞ்சலி பிர்லாவுக்கு எதிரான அவதூறான பதிவுகளை நீக்குமாறு, எக்ஸ் மற்றும் கூகுள் சமூக வலைதள நிறுவனங்களுக்கு டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2019ம் ஆண்டு தனது முதல் முயற்சியிலேயே யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றார். தொடர்ந்து பயிற்சி பெற்று ஐ.ஏ.எஸ் ஆன அஞ்சலி பிர்லா தற்போது ரயில்வே அமைச்சகத்தின் கீழ் பணியாற்றி வருகிறார்.மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்த அஞ்சலி பிர்லா தனது தந்தையின் செல்வாக்கினால் தேர்வு எழுதாமலேயே ஐ.ஏ.எஸ் ஆனதாக சமூக வலைத்தளங்களில் பலர் குற்றம் சாட்டினர்.இது சர்ச்சையை கிளப்பியது.இந்நிலையில், தன் மீது அவதூறு பரப்பும் இத்தகைய சமூக வலைத்தள பதிவுகளை நீக்கக் கோரி டில்லி உயர் நீதிமன்றத்தில் அஞ்சலி பிர்லா அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை இன்று (ஜூலை 23) விசாரித்த நீதிமன்றம்,‛‛ அஞ்சலி பிர்லாவுக்கு எதிரான அவதூறான பதிவுகளை நீக்குமாறு, எக்ஸ் மற்றும் கூகுள் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

INDIAN
ஜூலை 24, 2024 09:53

நெருப்பு இல்லாமல் புகையாது. எந்த தகுதியும் இல்லாத ஜெய்ஷா எப்படி BCCI க்கு தலைவர் ஆனார். அது போல தான். பதவியில் இருந்தால் என்ன தவறு வேண்டுமானாலும் செய்யலாம் என்பது நாட்டின் தலை எழுத்து.


Shankar
ஜூலை 23, 2024 22:16

வெகுவிரைவான தீர்ப்பிற்கு நன்றி நீதிபேதி அவர்களே.


Easwar Kamal
ஜூலை 23, 2024 22:02

இதுல ஏதோ தப்பு theriyudahe ? நம்ம ராகுல் கண்டிப்பாக இதை பற்றி நாடாளுமன்றத்தில் பேசுவார்? அப்போ மைக் அணைக்கப்படுமா? பாப்போம்


Barakat Ali
ஜூலை 23, 2024 21:44

அப்பெண் மீது புழுதி வாரித் தூற்றியவர்கள் மன்னிப்பா கேட்கப்போகிறார்கள் ????


Barakat Ali
ஜூலை 23, 2024 21:39

பாஜகவின் எதிரிகள் மக்கள் மதிப்பை இன்னும் இழப்பார்கள் ........


Ganesh
ஜூலை 23, 2024 20:40

சாமானிய மக்களுக்கு தீர்ப்பு வருட கணக்கில் ஆகும்


P. VENKATESH RAJA
ஜூலை 23, 2024 19:25

உழைப்பால் அரசு பணி பெற்றவர் குறித்து அவதூறு பரப்புவது தவறு தான்


தாமரை மலர்கிறது
ஜூலை 23, 2024 19:19

கஷ்டப்பட்டு படித்து பாஸ் செய்த அஞ்சலி பிர்லாவை பற்றி தவறாக விமர்சிப்பவர்களுக்கு பத்துவருடம் கடுங்காவல் தண்டனை கொடுப்பது மற்ற அவதூறு பரப்புவர்களுக்கு ஒரு சிறந்த படிப்பினையாக இருக்கும்.


Ganesh
ஜூலை 23, 2024 20:42

இதே எதிர் கட்சியையா இருந்த உண்மையான செய்தி யா இruக்கும்


மேலும் செய்திகள்



புதிய வீடியோ