உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பல் சிகிச்சை மையம் மாநகராட்சி திட்டம்

பல் சிகிச்சை மையம் மாநகராட்சி திட்டம்

பெங்களூரு: பெங்களூரின் 28 சட்டசபை தொகுதி வாரியாக, தலா ஒரு பல் சிகிச்சை மையம் துவக்க, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.இதுதொடர்பாக பெங்களூரு மாநகராட்சியின் சுகாதாரப்பிரிவு வெளியிட்ட அறிக்கை:பெங்களூரு மாநகராட்சி ஏற்கனவே, நகர ஆரம்ப சுகாதார மையங்கள், பிரசவ மருத்துவமனைகள், நமது கிளினிக்குகளை நிர்வகிக்கிறது. தற்போது 28 சட்டசபை தொகுதிகளில், தலா ஒன்று வீதம் பல் சிகிச்சை மையம் அமைக்க திட்டமிட்டுள்ளது. மொத்தம் 1.80 கோடி ரூபாய் செலவில், பல் சிகிச்சை மையம் திறக்கப்படும்.பல் சிகிச்சைக்கு, தனி மருத்துவமனை திறக்கப்படாது. ஏற்கனவே செயல்பட்டு வரும், மாநகராட்சி ஆரம்ப சுகாதார மையத்தில், இட வசதி உள்ள இடங்களில், பல் சிகிச்சை மையம் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.பல் சிகிச்சைக்கு தேவையான உபகரணங்கள், இருக்கைகள் என, அனைத்து வசதிகளும் செய்யப்படும். பல் சிகிச்சை மையங்களுக்கு வசதிகள் செய்யவும், டாக்டர்களுக்கு ஊதியம் வழங்கவும் அடுத்த ஆண்டு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படும்.ஒப்பந்த அடிப்படையில் டாக்டர்கள் நியமிக்கப்படுவர். மருத்துவ கல்லுாரிகளில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள், பல் சிகிச்சை மையங்களுக்கு பயன்படுத்தப்படுவர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !