உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அட்டப்பாடி வனத்தில் 395 கஞ்சா செடிகள் அழிப்பு

அட்டப்பாடி வனத்தில் 395 கஞ்சா செடிகள் அழிப்பு

பாலக்காடு: அட்டப்பாடி வனத்தில் கலால்துறை, வனத்துறையின் உதவியுடன் நடத்திய சோதனையில், 395 கஞ்சா செடிகளை கண்டுபிடித்து அழித்தனர்.கேரளா மாநில கலால் துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், துணை கலால் ஆணையர் ராபர்ட்டின் அறிவுரையின்படி, இன்ஸ்பெக்டர் ஷவுகத்தலி தலைமையிலான கலால் படை, வனத்துறையின் உதவியுடன், பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி வன பகுதியான ஏணிக்கல், கிண்ணக்கரை ஆகிய இடங்களில் சோதனை நடத்தினர்.அப்போது அங்குள்ள பள்ளத்தாக்கில், கஞ்சா தோட்டம் இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து தோட்டத்தில் உள்ள ஏழு முதல், 10 அடி வரை உயரத்தில் உள்ள, 395 கஞ்சா செடிகள் முழுவதையும் அழித்தனர். இதன் பின்னணியில் இருப்பவர்கள் குறித்து, விசாரித்து வருவதாகவும், வனத்தில் சோதனை தொடரும் என்றும் கலால் துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி