உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒருபக்கம் மோடி தலைமையில் வளர்ச்சி; மறுபக்கம் ஊழல்வாதிகள்: நட்டா சாடல்

ஒருபக்கம் மோடி தலைமையில் வளர்ச்சி; மறுபக்கம் ஊழல்வாதிகள்: நட்டா சாடல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிம்லா: 'ஒரு பக்கம் மோடியின் தலைமையில் நாடு முன்னேறிக்கொண்டிருக்கிறது. மறுபுறம் ஊழல்வாதிகளின் கூட்டமான இண்டியா கூட்டணி உள்ளது' என பா.ஜ., தேசிய தலைவர் நட்டா கூறினார்.ஹிமாச்சல பிரதேசம் கின்னார் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பேரணியில் நட்டா பேசியதாவது: கொரோனா மற்றும் உக்ரைன் போரால், பெரிய நாடுகளின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. அமெரிக்கா, ஐரோப்பா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளின் பொருளாதாரம் சிக்கலில் உள்ளது. ஆனால் இன்று பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியாவின் பொருளாதாரம் 11வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

டிஜிட்டல் பரிவர்த்தனை

பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராகும் போது, நாட்டின் பொருளாதாரம் 3வது இடத்திற்கு முன்னேறும். இந்தியாவில் படிக்காதவர்கள் அதிகம் உள்ளனர். டிஜிட்டலை என்ன பண்ணப் போறாங்க என காங்கிரசார் கூறினார்கள். இந்தியர்களின் திறனை அவர் அறிந்து கொள்ளவில்லை. இன்று காய்கறி விற்பவர் கூட டிஜிட்டல் பரிவர்த்தனை செய்கிறார்.

ரூ.350 கோடி

காங்கிரஸ் எம்.பி., வீட்டில் இருந்து ரூ.350 கோடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் பாகிஸ்தான் தரப்பில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தும் போது நமது ராணுவ வீரர்களை பதிலடி கொடுக்கவும், துப்பாக்கிச் சூடு நடத்தவும் அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் தியாகிகளானார்கள். ஒரு பக்கம் மோடியின் தலைமையில் நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது. மறுபுறம் ஊழல்வாதிகளின் கூட்டமான இண்டியா கூட்டணி உள்ளது. இவ்வாறு நட்டா பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

ES
மே 28, 2024 22:52

Please list what you have done for people.


முருகன்
மே 28, 2024 17:46

பிறகு ஏன் வளர்ச்சி பற்றி பேசாமல் ஆன்மிகத்தை பற்றி மட்டுமே பேசுகிறார்கள்


Syed ghouse basha
மே 28, 2024 15:08

ஐம்பது ஆண்டுகள் ஆண்ட காங்கிரஸ்ஸிடம் இல்லாத தேர்தல் நிதி மாநில அளவில் பலகோடி பெருமான கட்சி கட்டிடடங்கள் உலகிலேயே பணக்கார கட்சியின் தலைவர் ஊழலைப்பற்றி வெட்கமில்லாமல் பேசுகிறார்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை