உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ.,வின் சுவேந்து அதிகாரி கவர்னர் மாளிகை முன் தர்ணா

பா.ஜ.,வின் சுவேந்து அதிகாரி கவர்னர் மாளிகை முன் தர்ணா

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் நடந்த நான்கு சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலின்போது ஆயிரக்கணக்கானோரை, ஓட்டளிக்க விடாமல் தடுத்து நிறுத்திய ஆளும் திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பா.ஜ., மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி, வாக்காளர்களுடன் கவர்னர் மாளிகை முன் தர்ணாவில் ஈடுபட்டார்.

இடைத்தேர்தல்

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, கடந்த 10ம் தேதி மணிக்தலா, பாக்தா, ரனாகாட் தக்சின், ராய்கஞ்ச் ஆகிய நான்கு சட்ட சபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்தது. இதில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு, நேற்று முன்தினம் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், அனைத்திலும் திரிணமுல் காங்கிரஸ் வென்றது.சட்டசபை இடைத்தேர்தலின்போது ஆயிரக்கணக்கான வாக்காளர்களை, ஓட்டளிக்க விடாமல் தடுத்ததாக பா.ஜ., மூத்த தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரி குற்றஞ்சாட்டினார். இந்நிலையில், பாதிக்கப்பட்ட வாக்காளர்கள் 100க்கும் மேற்பட்டோருடன் நேற்று கவர்னர் மாளிகை முன் பா.ஜ., சார்பில் சுவேந்து அதிகாரி தர்ணாவில் ஈடுபட்டார்.அப்போது அவர் கூறுகையில், “ஓட்டுப்பதிவின்போது திரிணமுல் காங்கிரசாரின் அட்டூழியங்களை, ஊடகங்கள் முன் வெளிச்சம் போட்டு காட்டவே பாதிக்கப்பட்ட வாக்காளர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டேன்.இந்த விவகாரம் தொடர்பாக, தேர்தல் கமிஷனில் முறையாக புகார் அளிக்கும்படி கவர்னரிடம் முறையிட்டுள்ளோம்.

எதிர்ப்பு

''வரும் 21ம் தேதி, திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி அமைத்த தினத்தை, ஜனநாயக படுகொலை தினமாக கடைப்பிடித்து எங்களின் எதிர்ப்பை பதிவு செய்வோம்,” என்றார்.இதற்கு திரிணமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் குணால் கோஷ் கூறுகையில், “ஒவ்வொரு தேர்தலிலும் பா.ஜ.,வை, மேற்கு வங்க மக்கள் நிராகரித்து வருவதையே காட்டுகிறது,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை