உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டிஜிட்டல் பண பரிவர்த்தனை: இந்தியா தான் உலகத்துக்கே முன்னோடி!

டிஜிட்டல் பண பரிவர்த்தனை: இந்தியா தான் உலகத்துக்கே முன்னோடி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நியூயார்க்: 'டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் அனைத்து நாடுகளுக்கும் இந்தியா தான் முன்னோடியாக திகழ்கிறது' என்று 'விசா' நிறுவனத்தின் துணை தலைவர் கெல்லி மஹோன் துல்லியர் தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் இந்தியா

மத்தியில் ஆளும் பா.ஜ.,வின் முக்கிய தொலைநோக்கு திட்டங்களில் ஒன்றாக இருப்பது டிஜிட்டல் இந்தியா. கடைக்கோடி கிராமங்கள் வரை டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறைகள் சென்று சேர்ந்து விட்டன. அரசின் நலத்திட்டங்கள் முதல் பெட்டிக் கடையில் தீப்பெட்டி வாங்குவது வரை என அனைத்திலும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் பயன்பாட்டில் உள்ளன. முன்னேறிய நாடுகளை கூட பின்தள்ளி, இந்தியா தான் டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தில் முன்னணியில் இருந்து வருகிறது.

வளர்ச்சி

இந்த நிலையில், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை பற்றி கூறியுள்ள 'விசா' நிறுவனத்தின் துணை தலைவர் கெல்லி மஹோன் துல்லியர், இந்தியாவின் செயல்பாடுகளுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.அவர் கூறுகையில், 'உலகளவில் பணப்பரிமாற்ற முறையானது அதிவேகமாக டிஜிட்டல்மயமாகி வருகிறது. அதில், உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியா முன்னோடியாக திகழ்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் டிஜிட்டல் துறையில் மேற்கொள்ளப்பட்ட செயல்பாடுகளினால், இந்தியா உலகின் 5வது மிகப்பெரிய பொருளாதார நாடாக மாறியுள்ளது. மக்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் அதிகம் ஈடுபடுவதற்கு, அதில் உள்ள பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையும் காரணம்.

பங்களிப்பு

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் மூலம் 50 கோடி இந்தியர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களித்து வருகின்றனர். இதுவே, இந்தியா அதிவேகமாக வளர்வதற்கு முக்கிய காரணமாகும். அதுமட்டுமில்லாமல், டிஜிட்டல் பேமன்ட்களினால் உருவாகும் வாய்ப்புகளினால் பெண்களும் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்பை கொடுக்கின்றனர். தற்போது, 55 சதவீத பெண்கள் வங்கிகளில் கணக்கு வைத்துள்ளனர். அவர்களில் 20 சதவீத பெண்கள் இந்தியாவில் சிறு,குறு தொழில்களில் பெண்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

நம்பிக்கை

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கட்டியெழுப்புதற்கான காரணியாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். எதிர்காலத்தில் பணப்பரிவர்த்தனையில் இந்தியா அனைத்து நாடுகளுக்கும் முன்னோடியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, என அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Mr Krish Tamilnadu
ஆக 26, 2024 23:21

நாம் அவ்வளவு பெரிய ஆட்டுமந்தை கூட்டமா?. அவர்கள் எல்லாம் 2கே பிராப்ளம் பார்த்து இருக்கார்கள். என்னைக்கு காலை வாரி விடுமோ, என அச்சம் இருக்கும். டெம்பரவரி ஸ்டோர்ரேஸ் ஒரு மணி நேரம் குளோப்ஸ் ஆனாலும், பணம் செலுத்திய வர்களுக்கு லாபம். பணம் பெற்றவர்களுக்கு நாமம். இளநீர் விற்பவர்கள், தளளு வண்டி, கடை வைத்திருப்பவர்கள். அந்த மெஷின் சொன்னால் போது என விட்டு விடுகிறார்கள். உண்மையிலேயே கணக்கில் சேரவில்லை என்றால் கண்டு பிடிக்க தெரியாது. மேனுவல் நிச்சயம் வேண்டும் வாரத்தில் ஒரு நாள் ஆவது ஒரு நோட்டு போட்டு எழுதுங்கள். செக் பண்ணுங்கள். என்டீரி இருந்துச்சு இப்ப இல்ல என எஸ். ஜே. சூர்யா மாதிரி புலம்பி விடாதீர்கள்.


V pravin
ஆக 26, 2024 10:17

ஆம் பெருமைப்பட வேண்டிய விஷயம் அதே நேரத்தில் வெட்கப்பட வேண்டிய விஷயமும் நடந்து கொண்டிருக்கிறது ஆம் டிஜிட்டல் முறையில் லஞ்சம் வாங்குகிறார்கள் இதுவரையில் எந்த அரசோ எந்த நீதிமன்றமும் ஊழலுக்கு எதிராக மிக கடுமையான சட்டங்கள் கொண்டு வரவில்லை டிஜிட்டல் பரிவர்த்தனை மட்டும் பொருளாதார வளர்ச்சி ஆகாது என்றைக்கு லஞ்சம் அடியோடு ஒளிகிறதோ அன்றைக்கு தான் நாடு வலிமை பெறும் இது நாள் வரை எந்த ஒரு அரசும் ஊழலுக்கு எதிராக ஒரு சிறு துளி நடவடிக்கை கூட எடுக்கவில்லை ஜெய்ஹிந்த்


M Ramachandran
ஆக 26, 2024 09:58

ராகுல் கூறுகிறார் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நாட்டின் பொருளாதார வளர்ச்சியை தட்டியெழுப்புதற்கான காரணியாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். எதிர்காலத்தில் பணப்பரிவர்த்தனையில் இந்தியா அனைத்து நாடுகளுக்கும் முன்னோடியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, என அவர் தெரிவித்துள்ளார்.


சமீபத்திய செய்தி