உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ம.ஜ.த.,வினர் விரக்தி சிவகுமார் கண்டுபிடிப்பு

ம.ஜ.த.,வினர் விரக்தி சிவகுமார் கண்டுபிடிப்பு

பெங்களூரு: ம.ஜ.த.,வினர் விரக்தியில் இருப்பதாக, துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக, இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளோம்.கர்நாடகாவின் வட மாவட்ட பகுதியில், காங்., அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்புள்ளது மே 7ல் இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு நடக்கும் 14 தொகுதிகளில், 12 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறும். காங்கிரசின் வாக்குறுதித் திட்டங்கள், மக்களுக்கு பிடித்துள்ளது. பா.ஜ., மற்றும் ம.ஜ.த., தலைவர்கள் பலரும், காங்கிரசில் இணைகின்றனர். கட்சிக்கு சாதகமான சூழ்நிலை உள்ளது. ம.ஜ.த.,வின் 12 எம்.எல்.ஏ.,க்கள், காங்கிரசில் இணைவதாக கூறுவது பொய்யான தகவல். அந்த கட்சியினர் யாரும் எங்களுடன் தொடர்பில் இல்லை.ம.ஜ.த.,வினர் விரக்தியில் இருப்பதாக, தகவல் கிடைத்துள்ளது. அக்கட்சியின் மேலிட தலைவரின் குடும்பத்தில் பிரச்னைகள் உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ