உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெலகாவியை 3 மாவட்டங்களாக பிரியுங்கள்!

பெலகாவியை 3 மாவட்டங்களாக பிரியுங்கள்!

பெலகாவி, : ''நிர்வாக வசதிக்காக பெலகாவி மாவட்டத்தை, உடனடியாக பெலகாவி, சிக்கோடி, கோகாக் ஆகிய மூன்று மாவட்டங்களாக பிரிக்க வேண்டும்,'' என, பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி தெரிவித்தார்.கர்நாடகாவிலேயே அதிகபட்சமாக பெலகாவி மாவட்டத்தில் 18 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதை இரண்டாகவோ அல்லது மூன்றாகவோ பிரிக்கும்படி, அப்பகுதி அரசியல் தலைவர்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர்.தற்போது பொதுப்பணித்துறை அமைச்சராக இருக்கும் பெலகாவியை சேர்ந்த சதீஷ் ஜார்கிஹோளி நேற்று கூறியதாவது:பரப்பளவில் விசாலமாக இருக்கும் பெலகாவியை, நிர்வாக வசதிக்காக பெலகாவி, சிக்கோடி, கோகாக் என மூன்று மாவட்டங்களை பிரிக்க வேண்டும். இது பற்றி பல தரப்பிலும் ஆண்டுக்கணக்கில் வலியுறுத்தப்படுகிறது. அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.மக்கள்தொகையும் அதிகமாக உள்ளது. மாவட்டத்தை பிரித்தால் தான், வருங்காலத்தில் வளர்ச்சிப் பணிகள் செய்ய சுலபமாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ