உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜனநாயக முறைப்படி திமுக களம் கண்டது: என்கிறார் முதல்வர் ஸ்டாலின்

ஜனநாயக முறைப்படி திமுக களம் கண்டது: என்கிறார் முதல்வர் ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தி.மு.க., வெளிப்படையான ஜனநாயக நெறிமுறைப்படி களம் கண்டது என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றி குறித்து, தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக மக்கள் தி.மு.க. மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதைத் தான் இந்த இடைத்தேர்தல் வெற்றி எடுத்துக்காட்டுகிறது.

ஜனநாயக நெறிமுறை

மக்கள் மீது நாமும், நம் மீது மக்களும் நம்பிக்கை வைத்திருப்பதால், இந்த வெற்றி எதிர்பார்த்ததுதான். ஆனால், விக்கிரவாண்டியில் ஓர் இடைத்தேர்தல் என்பதுதான் கொஞ்சமும் எதிர்பாராதது. தி.மு.க. வெளிப்படையான ஜனநாயக நெறிமுறைப்படி களம் கண்டது. வெற்றிக்காகப் பாடுபட்ட அமைச்சர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகளும், வெற்றியின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் அறிவாலயத்தில் திரண்டிருந்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இண்டியா கூட்டணி

தமிழகத்தில் உள்ள விக்கிரவாண்டி தொகுதியுடன், நாடு தழுவிய அளவில் 13 தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் 10 தொகுதிகளில் இண்டியா கூட்டணி வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அளிக்கிறது. அடுத்தடுத்த தேர்தல் களங்களுக்கு ஆயத்தமாவதுடன் அடுத்தடுத்த தலைமுறையினரின் வளர்ச்சிக்கான சிந்தனைகளுடனும் அதனைச் செயல்படுத்தும் வலிமையுடனும் பயணிப்போம். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 59 )

arunachalam
ஜூலை 21, 2024 14:45

ஹா ஹா ஹா இந்த வருடத்தின் மிக சிறந்த நகைச்சுவை. கொடுத்த பணமும், புடவையும் ஜனநாயகம்.


xyzabc
ஜூலை 21, 2024 08:16

எத்தனை பொய்


tmranganathan
ஜூலை 21, 2024 07:59

பேச வந்துட்டார் ஜனநாயகத்தை பற்றி. இவர் நினைப்பது இவர் வம்சம் மட்டும் செழித்தோங்கனும் தமிழனாகிற மற்றவனெல்லாம் செத்து மடியனும் இந்த கோபாலபுர கொள்ளை கூட்டத்திற்காக. தீம்க வினர் கொத்தடிமைகள்தான்.


MUTHUMANI S
ஜூலை 20, 2024 17:50

தொடரட்டும் "திருடர்கள் மாடல் ஆட்சி"


Sureshkumar
ஜூலை 20, 2024 09:17

நீங்கள் செய்வது ஜனநாயகம் அல்ல , பண நாயகமே . எதிர்க்கட்சியாக இருந்தால் ஒரு பேச்சு, ஆளுங்கட்சியாக இருந்தால் ஒரு பேச்சு.


Sureshkumar
ஜூலை 20, 2024 09:17

நீங்கள் செய்வது ஜனநாயகம் அல்ல , பண நாயகமே . எதிர்க்கட்சியாக இருந்தால் ஒரு பேச்சு, ஆளுங்கட்சியாக இருந்தால் ஒரு பேச்சு.


sundarsvpr
ஜூலை 19, 2024 18:09

விளையாட்டு போட்டிகளில் குறிப்பாய் சிரிக்கட்டில் நல்ல மட்டடி வீரர்கள் சில நேரங்களில் சோபிக்கமாட்டார்கள். அப்போது 9 அல்லது 10 ஆவது வீரர்கள் ஜொலிப்பார்கள். அதுபோல் அரசியலில் தோற்கவேண்டிய வேட்பாளர் வெற்றி பெறுவார். அரசியல் ஒரு விளையாட்டு ஸ்தலம். அதுபோல் வெற்றி தோல்வி மாறி மாறி வரும். கள்ள சாராயத்தில் 60 க்கு மேற்பட்டோர் மாண்டாலும் இடை தேர்தலில். வெற்றி. அடுத்த தேர்தலில் கள்ள சாராய தாக்கம் வெற்றியை மாற்றாது என்பது என்ன நிச்சியம்?


Thangavelu Marudhaiyappan
ஜூலை 17, 2024 21:15

பணநாயகமுறைப்படிஎன்றுமாற்றவேண்டும்


S Ramachandran
ஜூலை 17, 2024 16:29

சேலை, ஒவ்வொரு நபருக்கும் 1000₹ கொடுத்தால் யார் தான் ஓட்டு போட மாட்டார்கள். திமுக ஜன நாயகத்தை ஊழல் பண்ணி தான் ஜயிக்கிறது


S.V.Srinivasan
ஜூலை 17, 2024 10:54

வாய் தவறி உளறிட்டாரு. பணநாயக முறைப்படி களம் கண்டது.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை