உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / என்னம்மா... இப்படி பண்றீங்களேம்மா...! ஹோட்டலில் சாப்பிடுவோர் 32 சதவீதம் அதிகரிப்பு!

என்னம்மா... இப்படி பண்றீங்களேம்மா...! ஹோட்டலில் சாப்பிடுவோர் 32 சதவீதம் அதிகரிப்பு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் ஹோட்டலில் சாப்பிடுவோர் எண்ணிக்கை, 2024ல் 32 சதவீதம் அதிகரித்துள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளது.இந்தியாவில் என்ன உண வகை சாப்பிடுகிறார்கள் என்பது பற்றி ஸ்விக்கி மற்றும் பெயின் அண்டு கம்பெனி சார்பில் ஆய்வு நடத்தினர். அந்த அறிக்கையில் டில்லிவாசிகள் அதிகாலையில் தோசையைத்தான் விரும்பி சாப்பிடுகிறார்கள்; வெகு சிலரே இட்லியை விரும்பி சாப்பிடுகிறார்கள் என தெரியவந்துள்ளது.இது குறித்து டில்லியில் ஹோட்டல் நடத்தி வருபவர் கூறியதாவது: எங்களுக்கு டில்லியில் எங்களுக்கு பல கிளைகள் உள்ளன. அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரையில் பார்த்தால் வாடிக்கையாளர்கள் வருகை 50 சதவீதம் இருக்கும். பெரும்பாலும் எளிதில் ஜீரணிக்கின்ற உணவையே விரும்பி சாப்பிடுவார்கள். தோசை, இட்லி அடுத்து பூரி வகைகள் மற்றும் சப்பாத்தியை விரும்புகிறார்கள்.இவ்வாறு தெரிவித்தார்.இந்திய உணவு சேவைத்துறையின் 2024ம் ஆண்டு ஆய்வின்படி டில்லியில் ஹோட்டலில் சாப்பிடுவோர்களின் எண்ணிக்கை 32 சதவீதம் அதிகரித்துள்ளதாக அதன் அறிக்கையில் தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

ram
செப் 19, 2024 12:00

இதில் சில ஹோட்டல்களில்....


MUTHU
செப் 19, 2024 09:55

தற்சமயம் மாபெரும் வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் அள்ளித்தரும் ஒரு தொழில். தொழில் முனைவோர்களை நல்ல வளமானவர்களாக்கும் ஒரு தொழில். இன்றைய நகரமயமாக்கலில் இதனை புரிந்து கொண்டால் இளைஞர்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு.


Narasimhan
செப் 18, 2024 12:19

அதேபோல் தெருவுக்கு தெரு ஆஸ்பத்திரிகள் வந்து அங்கு செல்வோர் நூறு சதவிகிதம் அதிகமாகி விட்டது


venugopal s
செப் 15, 2024 06:55

சென்னையில் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏ2பி போன்ற ஹோட்டல்கள் போனால் அன்னதானத்தில் இலவச சாப்பாட்டுக்கு போனது போல் எண்ணத் தோன்றுகிறது, அவ்வளவு கூட்டம். டோக்கன் வாங்கி முக்கால் மணி நேரம் காத்திருந்து அந்த மட்டமான சாப்பாட்டை சாப்பிட அப்படி ஒரு கூட்டம்!


JAYARAMAN
செப் 14, 2024 22:59

"என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா" என்ற நினைப்புதான் தவறு. வேலைக்கு செல்லும் பெண்ணே வேண்டும் என்று திருமணத்தின்பொழுது எதிர் பார்க்கும் இளைஞர், வீட்டு வேலைகளிலும் பங்கெடுக்க வேண்டும். ஆண்களும் சமைக்க கற்றுக்கொள்ள வேண்டும்.


Ram pollachi
செப் 14, 2024 20:46

பசிக்கு சாப்பிட்டால் நோய் வராது, ருசிக்கு சாப்பிட்டால் நோய் வரத்தான் செய்யும்... சோற்றுக்கு குக்கரை பயன்படுத்தாமல் வடித்து சாப்பிட்டால் நலம்.


KRISHNAN R
செப் 14, 2024 20:06

இன்சூரன்ஸ், ஆஸ்பத்திரி ,கொள்ளை கொண்டாட்டம்


theruvasagan
செப் 14, 2024 19:39

வீட்டுச் சாப்பாட்டை அலட்சியம் பண்ணிவிட்டு சம்பதி்க்கிற காசை ஊதாரித்தனமா செலவழிச்சு குடும்பத்தோட வெளியில் கண்டதையும் வாங்கித் திங்கிறது இல்லாட்டி ஸ்விக்கி ஸொமேட்டோ மூலம் ஆர்டர் செய்து சாப்புடறது. அதுவும் நமக்கு அந்நியமான உணவுகளை வாங்கி தின்னுத் தின்னே உடம்பு ஊதிப்போய் இல்லாத வியாதியை எல்லாம் வரவழைச்சுக்கறதுதான் இப்போதைய டிரெண்ட். சைனாக்காரனும் அமெரிக்காகாரனும் எந்த நன்மையும் ஊட்டச்சத்தும் இல்லாத அவங்களோட நொறுக்குதீனிக்கு நம்ம இளைய தலைமுறையை அடிமையாக்கிவிட்டானுக.


chennai sivakumar
செப் 14, 2024 18:25

Free flow of currency


ஆரூர் ரங்
செப் 14, 2024 18:18

விரைவில் ஆஸ்பத்திரியில் சேரும் நோயாளிகளின் எண்ணிக்கையும்...


சமீபத்திய செய்தி