மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
6 hour(s) ago | 2
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
12 hour(s) ago
பாலக்காடு : கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், ஒற்றைப்பாலம் பகுதியைச் சேர்ந்த இரண்டு டாக்டர்கள் மற்றும் ஒரு தொழிலதிபர் ஆகியோர், ஆன்லைன் வாயிலாக கும்பல் ஒன்று தங்களை ஏமாற்றி, 40 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, ஒற்றைப்பாலம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணையை தீவிரப்படுத்தினர்.போலீசார் கூறியதாவது: ஆன்லைன் வாயிலாக, இவர்களிடம் ஒரு வாரத்தில் இந்த மோசடி நடந்துள்ளது. மருத்துவர்கள் இருவரிடமும் தலா 6 லட்சம் ரூபாய், தொழிலதிபரிடம் 29.70 லட்சம் ரூபாயை அந்த கும்பல் மோசடி செய்துள்ளது.இவர்களை, மொபைல் போனில் வீடியோ அழைப்பு வாயிலாக போலீஸ் அதிகாரிகள் சீருடை அணிந்து கும்பல் தொடர்பு கொண்டுள்ளது. அப்போது பேசிய மோசடி கும்பல், 'உங்களுக்கு கூரியரில் வந்த பார்சலில் போதைப் பொருள் இருப்பதால், உங்களை கைது செய்யப் போகிறோம்' என்று தெரிவித்ததோடு, வழக்கில் இருந்து விடுபட, குறிப்பிடும் வங்கிக் கணக்கிற்கு பணம் செலுத்த வேண்டும் என மிரட்டி உள்ளது. மோசடி கும்பல் என அறியாமல், பயந்து போன இவர்கள், பணத்தை அனுப்பியுள்ளனர்.பின்னர், வழக்கு சம்பந்தமாக விசாரிக்க, திரும்ப அழைக்காததால், தாங்கள் ஏமாந்ததை உணர்ந்து, இவர்கள் போலீசை அணுகினர். மாவட்டத்தில் ஆன்லைன் மோசடி அதிகரித்துஉள்ளது. இவ்விஷயத்தில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இது போன்ற அழைப்புகள் வந்தால், உடனே அருகில் உள்ள போலீசாரிடம் அல்லது 1930 என்ற எண்ணிற்கு அழைத்து புகார் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.
6 hour(s) ago | 2
12 hour(s) ago