உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வரதட்சணையை ஆதரிக்கிறாரா ஷாதி டாட் காம் நிறுவனர்?

வரதட்சணையை ஆதரிக்கிறாரா ஷாதி டாட் காம் நிறுவனர்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: திருமண வரன் பார்க்கும், 'ஷாதி டாட் காம்' இணையதளத்தில், 'டவுரி கால்குலேட்டர்' எனப்படும், வரதட்சணையை கணக்கிடும் வசதி அறிமுகப்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது.திருமண வரன்களை, 'ஆன்லைன்' வாயிலாக பார்க்கும் நடைமுறையை முதல்முதலில் அறிமுகப்படுத்திய நிறுவனம் ஷாதி டாட் காம். இதை, அனுபம் மித்தல் என்பவர் துவங்கினார். இந்த இணையதளத்தில், 'டவுரி கால்குலேட்டர்' என்ற புதிய சேவை சமீபத்தில் அறிமுகமானது. இது குறித்து அனுபம் மித்தல் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது: முன்னொரு காலத்தில், வரதட்சணை குறித்த பேச்சு வார்த்தையை மாப்பிள்ளை வீட்டார் நேரடியாக நடத்தி வந்தனர். தற்போது, மாப்பிள்ளையின் வயது, வேலை, மாத சம்பளம், வைத்திருக்கும் மொபைல் போன், தேனிலவுக்கு மாலத்தீவா, லட்சத்தீவா என்பதையெல்லாம் கணக்கிட்டே வரதட்சணை நிர்ணயிக்கப்படுகிறது.எனவே, உங்கள் வரதட்சணை மதிப்பு எவ்வளவு என்பதை, உங்கள் விபரங்களின் அடிப்படையில் இந்த கால்குலேட்டர் கணக்கிட்டு சொல்லும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.இதன் வாயிலாக, அனுபம் மித்தல் வரதட்சணையை ஆதரிக்கிறாரா என பலர் கேள்வி எழுப்பினர். இது சர்ச்சையானது. அதன் பின் தான் உண்மை நிலவரம் தெரியவந்தது.அந்த டவுரி கால்குலேட்டரில் விபரங்களை அளித்தவுடன், வரதட்சணை தொகையை கணக்கிட்டு சொல்லும் முன், நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் நடந்த வரதட்சணை படுகொலைகளின் எண்ணிக்கையை தெரிவிக்கிறது. 'வரதட்சணை மதிப்பை விட, பெண்ணின் வாழ்க்கை மதிப்பற்றது இல்லையா' என, அறிவுரையும் வழங்குதை பார்த்த பலர் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு அனுபம் மித்தலை பாராட்ட துவங்கியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Ramesh Sargam
ஜூன் 01, 2024 12:50

இந்த காலத்தில் கல்யாணம் எத்தனை வருடங்கள் நிலைத்து இருக்கும் என்று கூறிவிடலாம். ஒரு பொருளுக்கு எப்படி manufacture date & expiry date அதுபோல இந்தக்கால திருமணத்துக்கும் நிர்ணயம் செய்துவிடலாம். முதலில் ஆண்கள் வீட்டார் வரதட்சிணை வாங்கினாலும், ஓரிரு வருடங்களில் ஒரு சிலபல காரணங்களால் மணவாழ்க்கை முறிந்தவுடன், பெண்வீட்டார், compensation என்று கூறி தாங்கள் கொடுத்த வரதட்சிணையைவிட அதிகம் சமீபத்திய உதாரணம் -


GMM
ஜூன் 01, 2024 10:52

நடுத்தர சிறிய சாதியினர் வரதட்சணை கேட்கும் நிலை பல ஆண்டுகளாக இல்லை?. மணப்பெண் கிடைப்பது அரிதாகிவிட்டது.? காரணம் வாக்கு வங்கி சாதிக்கு அதிக இட ஒதுக்கீடு, கலப்பு திருமணம், சிறப்பு திருமணம், மத மாற்றம் அனுமதி, மற்றும் நாடகம், நாடக காதல் அனுமதி, திரைப்பட ஈர்ப்பு. தற்போது மாவட்டம், மாநிலம் விட்டு தன் கலாச்சாரம் ஒத்த சாதியினரை தேடியும் குறைந்த பலன். வரதட்சணை செல்வ செருக்கில் உள்ள உயர் கல்வி, அதிகார, கட்சி அரசியல் குடும்பத்தில் இருக்கலாம்.


சோனா
ஜூன் 01, 2024 10:30

இப்பல்லாம் வரதட்சணை ஒரு பிரச்சனையே இல்லை. லட்சக்கண்ச்க்கில், கோடிக்கணக்கில் திருமபச் செலவு செய்யறாங்க.


Sampath Kumar
ஜூன் 01, 2024 10:24

நல்ல அனுபவகாரர் போல அது தான் செயலில் காட்டி உள்ளார் அவரு செய்வது சரிதான் ஏங்கே இல்லை வரதச்சனை சும்மா போலியாக ஏமாற்றி கொண்டு வாழ்கிறார்கள்


....
ஜூன் 01, 2024 09:21

பெண் கிடைப்பதே சிரமமாக உள்ள இந்த நேரத்தில் வரதட்சிணை கேட்டால் என்னாகும்? என்னதான் வரதட்சணை வேண்டாமென்று கூறினாலும் அந்தஸ்து பார்த்துதான் திருமணம் செய்கிறார்கள். இதற்கும் வரதக்ஷணை பெற்று கல்யாணம் செய்து கொள்வதற்கும் வேறுபாடில்லை.


Kasimani Baskaran
ஜூன் 01, 2024 07:31

ஆண்களுக்கு விலை நிர்ணயிக்கும் செயல் மகா கீழ்த்தரமான செயல்.


SaiBaba
ஜூன் 01, 2024 07:26

வரதட்சணை சட்டப்படி குற்றம். ஆனாலும் இன்று வரை எப்படி வரதட்சணை குற்றங்கள் நடக்கின்றன? சட்டங்கள் ஏட்டளவில் மட்டும் தானா?


chandrasekar
ஜூன் 01, 2024 07:15

very good. congratulations


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை