உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வரியை குறைக்கும்படி கேட்காதீர்கள்: நிதின் கட்கரி

வரியை குறைக்கும்படி கேட்காதீர்கள்: நிதின் கட்கரி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : “வரிகளை குறைக்கும்படி தொடர்ந்து கேட்காதீர்கள். வரிகள் இல்லாமல் அரசால் எப்படி வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள முடியும்?” என, மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி குறிப்பிட்டார்.டில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில், பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சருமான நிதின் கட்கரி பேசியதாவது: ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியை குறைக்கும்படி தொடர்ந்து கேட்காதீர்கள். அவ்வாறு நாங்கள் வரியைக் குறைத்தால், மேலும் குறைக்கும்படி கேட்பீர்கள்; இதுதான் மனித இயல்பு.நாங்கள் வரியை குறைக்க விரும்புகிறோம். ஆனால் வரி வருவாய் இல்லாமல், மக்கள்நலத் திட்டங்களை அரசால் எப்படி செயல்படுத்த முடியும்? பணக்காரர்களிடம் இருந்து வரியை வசூலித்து, ஏழை மக்களின் நலனுக்காகவே செலவிடுகிறோம். அரசுக்கென்றும் சில எல்லைகள் உள்ளன.தற்போது, 'லாஜிஸ்டிக்' எனப்படும் சரக்கு கையாளும் செலவு 14 முதல் 16 சதவீதமாக உள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் இதை, 9 சதவீதமாக குறைக்க உள்ளோம். இதன் வாயிலாக சர்வதேச அளவில் நம்மால் போட்டியிட முடியும்.சீனாவில் இந்த செலவு 8 சதவீதமாக உள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில், 12 சதவீதமாக உள்ளது. இந்திய நிறுவனங்கள், தரத்தில் சமரசம் செய்யாமல், உற்பத்தி செலவைக் குறைக்க முயற்சிக்க வேண்டும்.மூலதன முதலீடுகள் வாயிலாக, இந்தியா அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது. நீங்கள் செல்வத்தை மட்டும் உருவாக்கவில்லை; வேலைவாய்ப்புகளையும் உருவாக்குகிறீர்கள். இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.நம் நாடு வளர்ச்சி அடைந்த நாடாக மாறுவதற்கு இறக்குமதியைக் குறைத்து, ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Nathan
மார் 12, 2025 14:25

நாங்கள் எங்க சொன்னோம் அய்யா. நீங்கள்தான் 2014 தேர்தல் அறிக்கையப் பாருங்க வருமானவரியை குறைப்போம். கருப்புபணத்த கொண்டாதுட்டா ஜீரோ வரினுசொன்னதப் பில் படிங்க.


ameen
மார் 12, 2025 12:29

வரி ரொம்ப குறைவாக இருக்குது.. இன்னும் அதிகமாக வரி போடுங்கள்.. ஏன் நாங்கள் சம்பாரிப்பது எல்லாவற்றையும் வரியாக தந்துவிடுகிறோம்.. மேலும் வரி வேண்டுமானால் கிட்னியை கூட தருகிறோம்....டோண்ட் வரி....


Saleemabdulsathar
மார் 12, 2025 06:21

வரியை குறைக்கும்படி அமேரிக்கா கேட்கிறதே அதற்கு என்ன பதில்


J.Isaac
மார் 11, 2025 22:00

ஒவ்வொரு சுங்சச்சாவடியும் வெவ்வேறு பெயரில் உள்ளது. ஒவ்வொரு சுங்கச்சாவடியில் வெவ்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்படுவது ஏன் ?


J.Isaac
மார் 11, 2025 21:57

பார்வையற்றோர் பயன்படுத்தும் குச்சிக்கு ஜி எஸ் டி.


J.Isaac
மார் 11, 2025 18:53

பார்வைற்றோர் பயன் படுத்தும் குச்சிக்கும் ஜி எஸ் டி.


venugopal s
மார் 11, 2025 12:47

அப்புறம் நாங்கள் எப்படி சம்பாதிப்பது என்று மறைமுகமாக சொல்கிறாரோ?


sankar
மார் 11, 2025 13:05

நீ சொன்ன இந்த கருத்து - இருநூறு கட்சிக்கு தம்பி - தேசபக்தர்களை அவதூறு செய்ய வேண்டாம்


ஆரூர் ரங்
மார் 11, 2025 11:35

தரமான தங்க நாற்கர நெடுஞ்சாலைகள், லாரிகளில் அதிக சுமை ஏற்ற அனுமதி, மூன்றுமுறை எரிபொருள் விலைக் குறைப்பு, வணிக சோதனைச் சாவடிகள் அகற்றம், நேர விரையும் குறைப்பு என போக்குவரத்து அமைச்சகம் சரக்கு வாகன உரிமையாளர்களுக்கு நிறைய உதவியுள்ளது. ஆனால் அவர்கள் அதன் பலன்களை வாடிக்கையாளர்களுக்கு அளிக்க சரக்குக் கட்டணங்களை குறைக்கவில்லை. விலைவாசி குறைய ஒத்துழைக்கவில்லை.


J.Isaac
மார் 11, 2025 22:07

ஒவ்வொரு சுங்கச்சாவடிக்கும் வெவ்வேறு கட்டணம் ஏன்? சேலம் பெங்களூர் நெடுஞ்சாலையில் கிட்டத்தட்ட எட்டு இடங்களில் நான்கு ஆண்டுகளாக பணிநடைபெற்று போக்குவரத்து இடையூறு நடைபெறுகிறது


Ram
மார் 11, 2025 08:48

அதிகப்படியான வரியை போடுகிறீர்கள் , அதுதான் பிரச்னை , எந்தவரியும் 18% க்கு மிகாமல் இருக்கணும் , பெட்ரோல் டீசல் விற்பனையில் மக்களை கொள்ளையடிக்கிறீர்கள்


தமிழன்
மார் 11, 2025 09:23

சார் தமிழகத்துல நடப்பது புரியாமல் பதிவிடாதீர்கள். தமிழகத்துல இன்னும் திமுக தான் பெட்ரோலிய பொருள்கள் மீது அதிகப்படியான மாநில வரிகளை வாங்குகிறது. வாட் வரிதான் நாம் மாநில அரசிற்கு கொடுக்கிறோம். வேண்டுமானால் கூகுளில் தேடி பாருங்க. மற்ற மாநிலங்களில் ஜிஎஸ்டி ஏற்றுக் கொண்ட பிறகு விலைகள் வெகுவாக குறைந்துவிட்டன


S.Martin Manoj
மார் 11, 2025 10:41

தமிழன் 10 வருடத்திற்கு முன் என்ன மாநில வரியோ அதேதான் இன்று வரை வசூலிக்கப்படுகிறது ஆனால் மதிய அரசு கடந்த 10 வருடங்களில் மூன்று முறை வரியை அதிகம்படுத்தி உள்ளது.தெரிந்துகொண்டு பதிவிடுங்கள்


R K Raman
மார் 11, 2025 06:52

மிகவும் யதார்த்தமான கருத்து...