வரதட்சணை கொடுமை கர்ப்பிணி தற்கொலை
மைசூரு: வரதட்சணை கொடுமையால், நிறைமாத கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்டார்.மைசூரு நகரின், கனககிரியில் வசிப்பவர் சரத் ராஜு, 27. இவருக்கும், சைத்ரா என்கிற சிக்கதேவி, 23, என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, திருமணம் நடந்தது. தற்போது சைத்ரா எட்டு மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.வரதட்சணை கேட்டு, திருமணம் நடந்த சில மாதங்களிலேயே, கணவர் வீட்டினர் சைத்ராவை கொடுமைப்படுத்தத் துவங்கினர். கணவர், மாமியார், சின்ன மாமியாரும் தாக்கி துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.இவர்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்தது. கர்ப்பிணி என்றும் பாராமல் கொடுமைப்படுத்தினர். மனம் நொந்த சைத்ரா, நேற்று அதிகாலை துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.இவரது பெற்றோர் அளித்த புகாரின்படி, சரத் ராஜுவை போலீசார் கைது செய்துள்ளனர். வழக்குப் பதிவு செய்து, விசாரணையை துவக்கினர்.