மேலும் செய்திகள்
சுய தொழில் பயிற்சி... தேசம் உயர்த்தும் முயற்சி
25-Aug-2024
புதுடில்லி:டில்லியில் 200 பெண்களுக்கு ஆளில்லா விமானத்தை இயக்க பயிற்சி அளித்து, 'ட்ரோன் பைலட் லைசென்ஸ்' வழங்கப்படும் என கவர்னர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.இதுகுறித்து, அதிகாரிகள் கூறியதாவது:டில்லியில், 'மோ ட்ரோன் தீதீ' திட்டத்தின் கீழ், ட்ரோன் எனப்படும் ஆளில்லா குட்டி விமானத்தை இயக்க 200 பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியை நிறைவு செய்த பெண்களுக்கு ட்ரோன் பைலட் லைசென்சுடன் ட்ரோன்களும் வழங்கப்படும். அதை பயன்படுத்த அல்லது வாடகைக்கு விட அனுமதிக்கப்படுவர். இந்த திட்டத்தில், தலா 25,000 ரூபாய் செலவழிக்கப்படும்.இந்தப் பயிற்சியை துணைநிலை கவர்னர் சக்சேனா நேற்று முன் தினம் துவக்கி வைத்தார். இந்தப் பயிற்சியை தன்னார்வ தொண்டு நிறுவனம் அளித்து வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
25-Aug-2024